பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. சேட்படை Па- GT அவனிடம் இனிப் பொய் சொல்லும் நெறி அறிகின் றிலேன்' என்று கூறித் தழை ஏற்கத், தலைவியினுடைய குறிப்பைத் தோழி அறிய விரும்பினள். 23. குறிப்பறிந்து கூறல் (112. தவளத்த) அங்ங்னம் விரும்பின தோழி யானையைக் கடிந்து பேருதவி செய்தவருடைய கையில் தழைதுவளத்தகுமோ. அது துவளாமல் நாம் அவரது குறையை முடிக்க வேண்டாவோ என்று பக்குவமாகத் தலைவியினிடம் தோழி கூறினள். 24. வகுத்துரைத்தல் (113. ஏறும் பழி) இங்ங்னம் தோழி கூறியும் தலைவி பெரு நய வண1லை எ ஆதலின் தழையை வாங்காது நிற்ப, அக்குறிப்பு அறிந்து 'இரு வகையாலும் நமக்குப் பழி வரும். எங்ங்னம் எனில் தழை ஏற்பின் நாமே ஒரு நட்புச் செய்தோம் என்ற பழி வரும். தழையை ஏலாவிடின் வேறுவழி காணுது தலைவன் மடல்மா ஏறும் பழி நமக்கு வந்து சேரும். தழையை ஏற்ருல் அதல்ை வரும் பழி அறத்தொடு நிற்றல் முதலாய வழியால் தீர்க்கலாம். ஏலாவிடின் தலைவன் மடல்மா ஏறும் பழியை நம்மால் எவ்வகை யாலும் தீர்க்க முடியாது. ஆதலால் தழை ஏற்பதே தக்கது என்று தோழி தலைவிக்கு வகுத்துரைத்து நாம் புனங்காத்த போது நம்மை நோக்கி வந்த மலை போலும் யானையைத் தொலைத்த அவருக்கு யாம் செய்வது என்னே அதனை அறிகின்றிலேன், என்று தோழி கூறினள். 25. தழையேற்பித்தல். (114. தெவ்வரை) அங்ங்னம் தோழி தன்னிடம் கூறக் கேட்ட தலைவி கழை ஏற்பதே நன்று என்று உட்கொண்டு நிற்ப, அக் குறிப்பறிந்து தோழி நம்மாட்டுத் தலைவன் வைத்த அன்பால் இம்மலைக்கண் தலைவன் எளிதாகக் கொண்டு வந்து தந்த இத்தழை வளவிய கயிலைமலையிடத்து அல்லது