பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. பகற்குறி ஆP - . பட்ட இத் தலைவியை இம் மலையில் வாழும் கொடிச்சி' என் (ோ நீ சொல்வது. அங்ங்னம் சொல்லற் பாலையல்லை. என த் தலைவன் திருமணத்திற்கு உடன்படாது. கலவியை. விசேடித்துக் கூறின்ை. H 15. உண்மை கூறிவரைவு கடாதல் (130. வேய்தந்த)' திருமணத்துக்கு உடன்படாது தலைவியை விசேடித் துக் கூறிய தலைமகனிடம் எமக்குத் தாயுந்தந்தையு. மாய்த் தன் திருவடிக்கு எனக்கு அன்பைத் தந்து என்னை அடிமை கொண்டவராயுள்ள அம்பலவர் மலையில் என்னுடைய தாயும் தந்தையும் கானவரே (குறவரே) எங்கள் தொழில் தினைகாவல்; ஆதலால் உனக்கு வரைவு வேண்டாமென்றிருந்தால் நீ ஒன்றும் புனைந்து கூற வேண்டாம்' என்று தோழி தலைவனிடம் உண்மையைக் கூறி வரைவு கடாவா நின்ருள். 16. வருத்தங் கூறி வரைவு கடாதல் [131. மன்னுந்திரு) 'அங்ங்னம் உண்மை கூறிய, நீர் வரையாவிடின் தலைவி வருந்துவள். ஆனல், நீர் வரைவு என்று நினைப் தற்கே மனம் தளர்ந்து வாடுகின்றீர். இவ்வாறு உங்கள் இருவரின் உள்ளம் மாறுபட நிகழ்தலால் "நான்' (சிவபிரானுடைய திருவடியைப் போற்ருதவரின் அறிவு போல) தனிமையுற்று வருந்துகின்றேன்' என்று தோழி தலைவனிடம் மனம் குழைந்து கூறி வரைவு கடாவினுள். 17. தாயச்சம் கூறி வரைவு கடாதல் (132. பனித்துண்டம்) அங்ங்னம் மனம் குழைந்து கூறின தோழி சிலம்பா தலைவியின் கதிர் முலைகளின் ஒருப்பாட்டைக் கண்டு எம் அன்னை நெஞ்சழிந்து தலைவியின் சிற்றிடைக்கு இனி ஒரு பற்று (ஆதாரம்) கண்டிலம், என்று அஞ்சு கின் ருள். (ஆதலால் கடுக வரைந்து கொள் வாயாக). - ன்று தலைவனிடம் கூறி வரைவு கடாவினுள்.