பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. இரவுக்குறி டுக a i ன நன்னிழற் கீழ் ? கூறுவாயாக’’ என்று தோழி aாயத் தலைமகன் கேட்டான். 1. குறியிடம் கூறல் (154. பனைவளர்) இவ்வாறு வினவிய தலைவனுக்கு, பொதிய மலையிற் டொ லியும் சந்தனச் சாந்தை அணிந்து, சுனைக்கண் வள ரும் காவி மலர்களைச் சூடி, மயில்கள் துயில் செய்யும் வேங்கைப் பொழிலில் நாங்கள் விளையாடுவோம்’ எனத் தோழி கூறி, அவ்வேங்கைப் பொழிற்கண் நீ வந்து நின்று நின் வரவறிய மயிலெழுப்பு வாயாக’’ என்று குறி இடத்தை அவன் அறியும்படி சொன்னுள். 8. இரவுக் குறி ஏற்பித்தல் (155 மலவன் குரம்பை) இங்ங்னம் தலைமகனுக்குக் குறி இடம் கூறித் தலை மகளிடம் சென்று, 'தில்லையைச் சூழ்ந்த கானலிடத்து நல்ல பெடையொடு ஒரு அலவன் (நண்டு) விளையாடு வதைக் கண்டு வருத்தம் மிக்குத் தலைமகன் அந்திப் பொழுதின்கண் செல்வதைக் கண்டேன் அவன் எங் ாவனம் துயில்வானே அறிகிலேன், ! என்று தோழி அவனது ஆற்ருமையைக் கூறித் தலைமகளை இரவுக் குறிக்கு உடம்படும்படி செய்தாள். 9. இரவரவு உரைத்தல். (156 மோட்டம் கதிர் முலை) இரவுக் குறிக்குத் தலைமகளை உடம்படும்படி செய்த, தோழியிடம், 'சிவபிரான் திருவடிக்கே தலைவணங்கும் நம் தலைவன் மேகம் திரளுதலால், கண்ணைப் புதைத் தா ற் போல இருக்கும் செறிந்த இருளில் யானைகள் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரியும் மலைச்சரிவிடத்துத் தான் வருவதாகச் சொல்கின்ருன். இனிச் செய்வ தென்ன?' என்று தலைவியிடம் கூறினள். 10. ஏதங்கடறி மறுத்தல் (157 செழுங்கார்) இது கேட்ட தலைவி சிற்றம்பலத்தின்கண் கூத்து இயற்றும் திருவடியை ஏத்த தாரைப் போல வருந்தும்