பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு திருக்கோவையார் உரைநடை 24. நிலவு வெளிப்பட் வருந்தல் (171. நாகம்தொழ) ஏ. சந்திரனே! (நாகம்) யானையைப் போன்ற எங்கள் நாயகர் வர, நாங்கள் புறப்பட்டு எதிர் கொள் ளுகிற செறிந்த இருளிடத்தே தேர்ைந்த' (நாகம்) (சுரபுன்னைகள்) மிக்க பொழிலிடத்து அழகு வாய்ந்த உன்னுடைய முதன்மையை நீ காட்டுகின்ருய்; இதுதான் உன்னுடைய அறிவு இம் மலை நாகம் (பதஞ்சலி) தொழ அழகுள்ள அம்பலத்திற் கூத்துப் பயில்வானுடைய மலைகாண். இதைக் கடைப் பிடிப்பாயாக' என்று தோழி சிறைப்புறமாக, நிலவொடு புலந்து கூறித் தங் களுடைய தளர்ச்சியை அறிய மதியினுடைய விளக்கத் தைத் தலைவனுக்குத் தெரிவித்தாள். (நாகத்தால் விழுங்கப்படும் சந்திரனே! நீ நாகம் தொழுகின்ற அம்பலத்தான் மலையில் விளங்குதல் நன் றன்று நீ நன்மை பெற மாட்டாய்) நீ கண் கூசி நடக்க வேண்டும் என்பது கருத்து.) 25. அல்ல.குறி அறிவித்தல் (172. மின்அங்கு அலரும்) குறியில்லாத குறி யெதிர்ப்பட்டு மீண்டதற்கு அடுத்த நாள் தலைவன் பகற்குறியில் வந்து நிற்பத், *தில்லையை ஒப்பவனே! பொன் மலரும் புன்னைக்கண் உண்டாகிய தம் சேக்கை இடத்து அன்ன மெல்லாம் துன்புற்றுப் புலருமளவும் துயிலாது துன்புற்றன. அவை ஏன் அங்ங்னம் துன்புற்றன என்று அறிகிலேன்' என்று தோழி அல்ல.குறிப் பட்டமையைச் சிறைப்புற மாகத் தலைவனுக்கு உரைத்தனள். 26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் [1+3. சோத்துன்) 'பெருங் கடலே! முன்பு ஒருகால் நீ இவ்வாறு ஒலித்து உன்னிடத்து இருந்த அமிர்தத்தையும், திருவையும் மதியையும் (திங்களையும்) இழந்தாய்; அங் ங்னம் இழந்தும் நீ மறுபடியும் ஒரு பயனும் இல்லாமல் இவள் (தலைவி) வாடும்படி இரையா நின்ருய்; காரண