பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

· Har O திருக்கோவையார் உரைநடை 1. அகன்று அணைவு கூறல் (181. புகழும் பழியும்) அவ்வாறு அலர் அறிவுறுத்த தோழி தலைவனை நோக்கி 'நீ இத்தன்மையை நினைந்து சிலநாள் அகன்று பின்பு அணை வையாயின், அம்பலும் அலரும் அடங்கி இப்பொழுதே தலைவிக்குப் பழி இல்லையாகும்' என்று அவன் இசையும்படி பின்வருமாறு கூறினள். காரணமாக உண்டான புகழும் பழியும் ஒருவன் வளர்க்குமாயின் தாம் வளரும் அக்காரணத்தை இடையருமல் செய்தால் அது மாளாது பின்னும் வளரும்; அங்ங்னம் செய்யாவிட்டால் அவை தாமாக வளரா; ஆதலால் நீ இப்பெற்றியைக் கருதுவையாயின் தலைவிக்குப் பழி இப்பொழுது இல்லையாகும். 2. கடலொடு வரவு கேட்டல் (182. ஆரம்பரந்து) தோழி கூறியபடி தலைவன் தலைவியை விட்டுப் பிரிய அப்பிரிவுக்கு ஆற்ருத தலைவி, ஒலிக்கும் கடலே! என்னை விட்டுப் பிரிந்த தலைவர் என்னிடம் மீண்டு வரும் பரிசை உன்னிடம் கூறினரோ ?’ என்று தலைவன் வரவைப் பற்றிக் கடலைக் கேட்டாள். 3. கடலொடு புலத்தல் (183. பாண்கிகர்) இவ்வாறு கடலொடு வரவு கேட்ட தலைவி, அக்கடல் தனக்கு வாய் திறவாமையின், 'என் வளை கொண்டு போன தலைவரின் செய்தியை யான் கேட்க, நீ ஒரு வார்த்தையும் சொல்லுகின்றிலை. அஃது ஏன்?' என்று பின்னும் அக்கடலொடு புலந்து கூறினுள். 4. அன்னமோடு ஆய்தல் (184. பகன் தாமரை) அவ்வாறு கடலொடு புலந்து கூறிய தலைவி, *தாமரைக்கண் வாழும் அன்னமே 1 அரும்பாகிய முத்தை அணிந்த இப்புன்னை நான் இந்நிலையில் இருக்கக்கண்டும், ஒன்றும் சொல்கின்றதில்லை. என்னை