பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி திருக்கோவையார் உரைநடை கசு. உடன்போக்கு 1. பருவம் கூறல் (194. ஒராகம்) இவ்வாறு சொல்லித் தலைவனுக்கு அலர் அறிவித்த தோழி, 'பூசப்படுவன பயின்று, அமிர் தத்தைப் பொதிந்து, செம்பொன் பொடி சிதறினது போன்ற (தலைவியின்) கொங்கைகளின் பெருத்த கதிர்ப்பைக் கண்டால் எங்கள் உறவினர் எண்ணுவது ஒன்றுமில்லை. (அதாவது மெத்தவும் விசாரிப்பார்கள் என்பது) கொங்கையின் முதிர்வு கண்டமையான் மகட் பேசுவார்க்கு எமர் மருது கொடுக்கவும் கூடும்; அதுபடாமல் நிற்ப, நீ முற்பட்டு வரைவாயாக' எனத் தலைமகனுக்குத் தலை மகளது பருவநிலை கூறினள். 2. மகட்பேச்சு உரைத்தல் (195. மணி அக்கு அணியும்) அவ்வாறு, பருவம் கூறிய தோழி படைத்து மொழி யால் (நடவாததை நடந்தது போன்று சொல்லினல்) 'துறைவா ! நிறைந்த பொன்னை மேலும் மேலும் அயலவர் பலர் தலைவிக்கு அணியக் கருதுகின் ருர். ஆதலால் நீ இந்நிலையில் தலைவியின் காரியத் தில் செய்யக் கருதுவதை இன்றே துணிந்து செய்வாயாக' என்று தலைவனிடம் உரைத்தாள். 3. பொன் அணி உரைத்தல் (196. பாப்பணியோன்) அவ்வாறு படைத்து மொழியால் மகட் பேசல் கூறின தோழி, துறைவனே! தலைவிக்குக் காப்புக் கட்டினர்கள். இனிப் பொன் அணிவார்களாய் இருக்கின்ருர்கள். முற்றத்தில் கலியான முரசுகள் குழுமித் திரண்டு நின்று சங்கங்கள் முழங்கா நின்றன. இனிச் செய்ய வேண்டி யதைச் செய்வாயாக’ என்று தலைவனை எச்சரித்தாள். 4. அருவிலை உரைத்தல் (197. எலும்பால்) இவ்வாறு தோழி பொன் அணி உரைப்பக் கேட்ட தலைவன் 'யான் வரை வொடு (மணம் செய்ய) வருதற்கு,