பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ அ , உடன்போக்கு 4ன க தளிராம் போலும்' என்று தோழி தலைவனுக்குத் தலைவியின் துணிவை எடுத்துக் கூறினள். 17. குறியிடம் கூறல் (210. முன்னேன்) அங்ங்னம் தலைவியின் துணிவைத் தலைவனlடம் எடுத்துரைத்த தோழி : எனது உயிர் போன்றவளுடைய பெறுதற்கரிய உயிரை ஒப்பவனே ! உன்னுடைய அருளைப் பெறலாம் என்னும் ஆசையினலே பொன் போலும் நிறைந்த நல்ல மகிழம்பூக்கள் விழ அவை விழுகின்ற ஓசையை நீ செய்யும் குறியாக அறிந்து விரும்புகின்ற மிக்க இருளில் நான் அவளைக் கொண்டு வருகின்றேன். நீ அவளைக் கொண்டு போவாயாக; நீ முன்பு வந்த அக்குறியிடத்து வந்து நில்' என்று தலைவனுக்குக் குறியிடம் கூறினள். 18. அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் (211. பனிச் சந்திரன்) அங்ங்னம் கூறின தோழி தலைவியைக் குறி இடம் கொண்டுவரப் போன பின்பு, தலைவன் 'அனிச்சம் பூப் போலும் அழகிய இத்தலைவியின் சிறிய அடிகள் ஐயோ! தீப்பழுத்த பழத்தினது சிவந்த திரள் போல உள்ள கல்லின் கூட்டங்களை உடைய காட்டை இங்கு நின்றும் போய்க் கடக்குமாயின், இனி இவளுக்கு என் காரணமாக வந்து அடையக் கூடிய துன்பம் வேறு என்ன வேண்டும்' என்று நினைத்து உள்ளம் வாடினன். 19. கொண்டு சென்று உய்த்தல் (212. வைவந்த) அங்ங்ணம் விாழ நின்று தலைவன் நிற்கத் தோழி தில்லையை வாழ்த் தாதார் மனம்போல இருள் நிறைந் துள்ளது. தில்லையை வாழ்த்துபவருடைய மனம்போலப் பொய்கைகள் தெளிந்து நிற்கின்றன, இப்பழைய ஊர் துயில்கின்றது. அதனுல் வள்ளலே! உனது உள்ளத்தில் நீ கருதியதைத் தெய்வம் இப்பொழுதே உனக்குத் தரும்: