பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

бт дРи திருக்கோவையார் உரைநடை 32. அறத்தொடு நிற்றல் (225. ஆளரி) அங்ங்னம் வினவிய செவிலிக்கு, "திருமாலுக்கும் அரிதாய்த், தில்லை யாவருக்கும் எளிதாம் திருவடியை உடைய சிவபிரானது மலையில் எம்முடைய தலைவி வண்டலைச் செய்யும் ஆயத்துடன் விளையாடும் பொழுது சிங்க ஏற்றுக்கு ஒப்பார் ஒருவர் நல்ல நிறமுடைய மலர் மாலை ஒன்றை ஏந்திவர, அதைத் தன் பாவைக்கு வேண்டுமென்று விருப்பத்துடன் அவருடன் வேண்டிப் பெற்றுக் கொண்டாள். இத்துணையும் அறிவேன்' என்று. தோழி தலைவியின் உடன் போக்குத் தோன்றக் கூறி, அறத்தொடு நின்ருள் (அறியாத காலத்து நிகழ்ந்ததனே அறிந்த பின்பு ஒழுக்கமாகக் கொள்கையால் நாயகியின் செய்கை கற்பிளுேடும் பெருமையோடும் மாறு: கொள்ளாது; உலகிளுேடும் அச்செய்கை மாறு கொள்ளாது என்றபடி.) (அறியாப் பருவத்து நிகழ்ந்ததனை 'உற்ருர்க்கு உரியர் பொற்ருெடி மகளிர், கொண்டார்க்கு உரியர் கொடுத்தார்' என்பதை உட்கொண்டு அறிந்த பின் நிற்றல் அறத்தொடு நிற்றல் என்ப.) 33. கற்பு நிலைக்கு இரங்கல் (226. வடுத்தான்) தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட செவிலி “இஃது. அறமாயினும் இவள் பருவத்திற்குத் தகாது ஆயினும் அன்று மடுவிலே விழுந்து அவள் வருந்தும்போது தான் இரக்கம் கொண்டு அவளை எடுக்கப் பெற்ருேம் என்று மகிழ்ந்து அவளை மடுவிலிருந்து எடுத்து அனைத்துக் காத்து உதவி மகிழ்ந்தவருக்கு இனியன செய்தால் எம். அன்னைக்கு (தலைவிக்கு) நாம் இனியின செய்ததாகும். அவள் (தலைவி) சென்ற வழியில் செல்வதல்லது வேறு வழி @6ుడిు' என்று தலைவியின் கற்பின் நிலைமையைச் சொல்லக் கேட்டு உணர்ந்த நற்ருய் இரங்கி வாடினள். (தலைவிக்கு) இனியன " செய்கை அவளை வரைந்து கொடுத்தல். (திருமணம் செய்வித்தல்)