பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. உடன்போக்கு { MT „k* 47. புறவொடு புலத்தல் (240. புயல் அன்று) அங்ங்னம் வேட்ட மாதைக் கேட்டு அது வழியாய்ச் சென்ற செவிலி அயலானுமாய்த் தனியனுமாய் உள்ள ஒருவனுடைய அழகிய சொல்லே துணையாகக் கொண்டு ஒரு மாது கொடிய காட்டில் அவனுடன் சென்ருல், அழகை உடைய புருவே இது தகுதியன்று என்று நீ அவளுக்குச் சொல்லவில்லை; நீ வாழ்வாயாக’ என்று புறவொடு தனது மெலிவைச் சொல்லிப் புலந்து 48. குரவொடு வருந்தல் (241. பாயும் விடை) இங்ங்னம் புறவொடு புலந்துபோன செவிலி 'உன் பாவையும் நீயும் நின்று நிலாவும் பெருங் குரவே! என்னுடைய பாவை (என் மகள்) உன் முன்னே இக் கொதிக்கின்ற காட்டில் அசைந்து அதைக் கடந்து செல்வதை விலக்காமல் நீ அதைக் கண்டு நின் றதும் அன்றி இவ்வாறு நிகழ்ந்தது என்று எனக்கு வாய் திறந்து சொல்லவுமில்லை. இஃது உனக்குத் தகுமோ ?” என்று குரவொடு வாடி உரைத் தனள். 49. விரதியரை வினுவல் (242. சுத்திய) அவ்வாறு குரவொடு வருந்திச் செல்லா நின்ற செவிலி 'பொக்கனத்தையும் (திருநீற்றுப் பையையும்), எலும்பு ஆகிய அணியையும், கட்டங்கம் (மழு) என்னும் படையையும், சூழ்ந்த சடையையும், மெய் முழுதும் மூடிய திருநீற்றின் வெண் கோலத்தையும் உடையீர்! மிக்க பத்தி உடையவர்கள் போல, பனைத்து இறுமாந்த கொங்கையை உடையாள் ஒரு பித்தி தன் பின்னே வர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோ ?” என எதிரே வந்த விரதியரை வினவினள். 50. வேதியரை வினுவல் (243. வெதிரேய்) இவ்வாறு விகதியரை வினவி, அவ்வழியாகச் செல்லா நின்ற செவிலி மூங்கில் தண்டு பொருந்திய