பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E}| &#F" திருக்கோவையார் உரைகடை காக்கின்ருேம். ஆதலால் நீர் வரைவு வேண்டாவிடின் எம்மைப் புனை ந்துரைக்க வேண்டுவதில்லை' என்று கூறிப் பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்கள் உண்மை நிலையைக் கூறினள். I 4. tஏதம்கூறி இரவரவு விலக்கல் (253. கடந்தொறும்) இங்ங்னம் உண்மை உரைத்து வரைவு கடாய தோழி 'சிங்கம் தனக்கு யானையாகிய உணவைத் தேடி இரவில் இருளில் காடுகள் தோறும் வருகின்ற வழியில் நீ தனியாக கைவேலே துணையாக வந்தால் அன்பனே ! எம்மிடத்து உண்டாகிய உன் அருள் எங்களுக்குத் துன்ப மாகத் தோன்றுகின்றது. இனி இந்த இருளில் வாரா தொழிவாய்' என ஏதம் கூறி தலைவனை இரவுவரவு விலக்கினள். 5. பழிவரவு உரைத்துப் பகல்வரவு விலக்கல் (254. களிறுற்ற) இவ்வாறு இருளில் வாரா தொழி.க என்றது பகல் வரச் சொன்னவாரு மென வுட்கொண்டு, தலைவன் பகற் குறிச் சென்று நிற்பத், தோழி எதிர்ப்பட்டு, ஐயனே ! நீ பகல் வந்து எமக்குச் செய்கின்ற மெய்யாகிய அருள் புறத்தார் அறிந்து வெளிப்பட்டுப் பழியாக வந்துள்ளது. அதளுல் சிற்றம்பலத்தை நெஞ்சால் உரு தாரைப் போல நாங்கள் இடர்ப்படுகின்ருேம். இனிப் பகல் வரவு ஒழிவாயாக'என்று:பழிவருதல் கூறிப் பகல் வரவு விலக்கு கின் ருள். 6. தொழுதிரந்து கூறல் (255. கழிகட்) இங்ங்னம் பகல்வரவு விலக்கின. தோழி இவன் இரவு வரவும் கூடும் என உட்கொண்டு, 'கண்ணிர் பொழிந்து மயில் போலத் துவளா நின்ற தலைவி காரணமாகச்

  • செய்யுள் 130 பார்க்க. 1. செய்யுள் 157 பார்க்க.

4. செய்யுள் 139 பார்க்க.