பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ1 அ திருக்கோவையார் உரைநடை மாயினும் அவ்வாறு சொல்லுவாரில்லை’ என்று தலைவி தான் செல்லுதலை நினைத்துத் தோழியிடம் தலைவனுக்குக் கேட்கும்படி சிறைப்புறமாகக் கூறினள். 16. ப்ொலிவழி வுரைத்து வரைவு கடாதல் (265. வாரிக் களிற்றின்) தலைவி வருந்தா நின்றமை சிறைப்புறமாக அறிந்த தலைவன் குறியிடை வந்து நிற்பத் தோழி எதிர்ப்பட்டு ஐய! களிற்றின் மருப்பினின்று சிதறும் முத்துக்களை வாரி அவற்றின் அருமையைக் கருதாது தமக்கு இன்பம் தரும் வேரிக்கு (கள்ளுக்கு) முகந்து கொடுத்தாற் போல என் ஐயரது (தந்தை முதலோருடைய) காவலை விட்டு நின் வயத் தளாகிய இவளது (தலைவியின்) அருமை கருதாது நினக்கு இன்பம் செய்யும் களவொழுக்கம் காரணமாக மயில் போன்ற இவளை இகழ்ந்து மதித்தாய்; அதல்ை தன் தன்மையை இழந்து இவ்வாறு பொலிவு அழிந்து இவள் இருத்தல் தகுமோ? நீயே சொல்?’ என்று தோழி தலைவியின் பொலிவு அழிவதைக் கூறி வரைவு கடாவா நின் ருள். குறிப்பு: கள. வரைவு முடுக்கம்’ என்னும் இவ்வதிகாரம் 1. வருத்தமிகுதி கூறி வரைவு கடாதல் முதலான 16 துறைகளேக் கொண்டு முடிகின்றது. க.அ. வரைபொருட் பிரிதல் தோழியால் வரைவு முடுக்கப்பட்டு வரைபொருட் பிரிதல் நிகழும். அது பின்வருமாறு : 1. மு.2ல் விலை கூறல் (266. குறைவிற்கும்) இவ்வாறு தோழியால் வரைவு முடுக்கப்பட்ட II. தலைவன் தான் வாைவொடு வரும்ப்ொருட்டுத் தோழியை