பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jo Ho திருக்கோவையார் உரைநடை சோலையையும் அன்று உன்னை விட்டுப் பிரியேன், பிரியின் ஆற்றேன் என்று அவர் கூறிய வஞ்சினத்தினது மெய்ம்மையையும், அன்பையும் நமக்கு மருவி வைத்துப் பின் கதுமென வெங்கானிற்போகிய போக்கையும்,போய்த் தேடு நிதியினது செய்தற்கருமையையும் நினைந்து நீ வருந்தினுல் ஏந்திழாய் ! அயலார் இம்மலர்ப் பாவை யன்னவளுக்கு (தலைவிக்கு) வேறுபாடு வந்தவா றென்னே ? என்று ஐயுரு நிற்பராதலால் நீ ஆற்ற வேண்டும்’ என்று தலைவியின் வழி ஒழுகி அவளைத் தெருட்டி வற்புறுத்தினள். 11. வன்புறை யெதிரழிந்திரங்கல் (276. வந்தாய் பவர்) அங்ங்னம் தெருட்டிய தோழியிடம் இளமந்தி மயிலின் முட்டையைப் பந்தாடுகின்ற மலை நாடுடைய தலைவனது பண்பு அழகாய் இருக்கின்றது. தமக்கு ஒரு பற்றுக் கோடின்றி வருந்தும் திருவினை உடையார்க்கு அவன் (தலைவன்) வரைவு மிகவும் இனிது. யான் ஆற்றேன்' என்று தலைவி வன்புறை எதிரழிந்து இரங் கினள். (வந்தாய்பவர் தோழியாகவும், இளமந்தி தலைவனுகவும், பந்தாடுதல் தலைவியின் வருத்தம் பாராது தான் வேண்டியவாருெழுகும் அவனது (தலைவனது), ஒழுக்கமாகவும் உரைக்கலாம். இது தலைவன் வரைந்து கொள்ள நீட்டிப்ப, தலைவி மன வலிமை இழந்து வாடியது.) 12. வாய்மை கூறி வருத்தந் தணித்தல் (277. மொய்யேன்பதே) இவ்வாறு வரைவு நீடுதலால் மனவலிமை இழந்து வருத்திய தலைவிக்கு அவர் (தலைவர்) சொன்ன வார்த்தை உனக்குப் பொய் என்பதே கருத்தாயின், இவ்வுலகத்து மெய்யென்பதே சிறிதுமில்லை' என்று தோழி தலைவனுடைய வாய்மை கூறி அவளுடைய (தலைவியினுடைய) வருத்தத்தைத் திணிவித்தாள்