பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வரைபொருட் பிரிதல் சின் அை கூறும் புலவரின் கூட்டமும், வண்டுகளும், வலம்புரிச் சங்குகளும் ஆரவாரிப்பத் (தலைவனுடைய) பெருந்தேர் ஒலி வருவது கேட்ட தோழி உவகையோடு சென்று தலைவிக்குக் காதலரின் தேர் வரவு எடுத்துக் கூறினள். 31. மனமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் (296. பூரண பொற்குடம்) தலைமகளுக்குத் தோழி தேர்வரவு கூறி நின்ற அந் நிலையில் தில்லை போன்ற இவளுக்குத் (தலைவிக்கு) மன்றல் என்று மனமுரசு எங்கும் ஒலி செய்து நின்றது. அதளுல் வாயில்கள் தோறும் நீரால் நிறைக்கப்பட்ட பொற்குடத்தை வைக்க, மணிமுத்தம், பொன் பொதிந்த தோரணம் எங்கும் ஓங்குவதாக, துாரியங்கள் (வாத்தி யங்கள்) ஆர்ப்பன ஆகுக. இவ்வாறு நாம் மனயை அலங்கரிப்போம்' என்று மனையில் உள்ளார் மகிழ் வொடு கூறி நின் ருர். 32. ஐயுற்றுக் கலங்கல் (297 அடற்களி) அங்ங்னம் மண மனையை அலங்கரியா நிற்ப, நமது விட்டில் முழங்குகின்ற பெரிய மனமுரசு மலையின்கண் மதத்தை உடைய களி யானையை அன்று நம்மேல் வராமல் நம்மைக் காத்தவருக்கோ, அல்லது இயை இல்லாத (சம்பந்தம் இல்லாத) வேறு யாவருக்கே அறிகின்றிலேன் என்று தலைவி ஐயுற்றுக் கூறினள். 33. நிதி வரவு கூருநிற்றல் (298. என் கடைக் கண்) ஐயுற்றுக் கலங்கி நின்ற தலைவிக்குத் தமக்கு ஒரு பயன் கருதாது நடிக்கு இறுதியைப் பயக்கும் யானையை அன்று கடிந்தவர் நம் கடைமுன் தோன்றும் முழுநிதியை (குறைவில்லா நிதியை) (நமர் வேண்டிய படியே) நின்னை மணந்து கொள்ளக் கொண்டுவந்து விட்டார்'. என்று தோழி மகிழ்தரு மனத்தொடு நிதி வரவைக் கூறினள்.