பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. ஒதற் பிரிவு கOங். சிங்க ஏற்றை ஒப்பானுடைய (தலைவனுடைய) தேர் பிறிதோரிடத்துத் தங்காது; தலைவியும் தன் கணவகிைய தெய்வத்தை அன்றிப் பிறிதொரு தெய்வத்தைத் தெய்வ மாக நினையாள். இஃது இவர் காதல்’’ என்று அவ்விருவர் காதலும் மருவுதலை நற்ருய்க்குக் கூறினள். 9. கலவி இன்பம் கூறல் (307. ஆனந்த) இருவர் காதலும் மருவுதல் கூறின. செவிலி இவ் விருவரின் காதலும் களிப்பும் இன்ப வெள்ளத்திடை அழுந்தப் புகுகின்றதோருயிரானது ஓர் உடம்பால் துய்த்தல் ஆராமையின் இரண்டு உடம்பைக் கொண்டு அவ்வின்ப வெள்ளத் திடைக் கிடந்து திளைத் ததளுேடு ஒக்கும்; அதுவேயுமன்றி அம்பலத்தைச் சேர்ந்த இன்ப வெள்ளத்தைத் தருகின்ற வீரக்கழல் ஒலிக்கும் திருவடியை உடையவனுடைய அருளைப் பெற்றவரின் இன்பம் போல இவ்வின்ப வெள்ளமும் ஒருகாலத்தும் குறைவு படாது, இவ்வணி நலமும் முதிராது (இவ்வின்ப வெள்ளம் ஒருகாலும் வற்ருது முற்ருது) என்று நாயகி பெற்ற நலத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிக்க தோழி தன் உள்ளத்தோடு கூறினள். குறிப்பு : க.க மணஞ் சிறப்புரைத்தல்’ என்னும் இல் அதிகாரம் 1. மண முரசு கூறல் முதலான 9 துறைகளைக் கொண்டு முடிகின்றது. உo. ஒதற் பிரிவு ஒதற்பிரிவு என்பது வரைந்து கொண்ட பின்னர்த் தலைவனுக்கு முதற்பிரிவு ஒதலாதலாற் கல்வியின் மிகுதி கூறி நீங்கா நிற்றல். * * முன்னரோதலின்றி இவளே வரைந்த பின்னர் ஒத நின்ருனேவெனின், அல்லன், முன்னரிவனைப் பொரு