பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக க0 திருக்கோவையார் உரைநடை தலால்) (தலைவியின்) கலக்கம் தீரப் பருவம் அன்று என்று கூறினள். 10. மறுத்துக் கூறல் (325. தேன்திக்கு) பருவம் அன்று என்று கூறிய தோழிக்கு,சிற்றம்பலத் தாருடைய குழையும், நானும் ஆகிய பாம்பை ஒத்து இக் காந்தள் துடுப்புப்போல மலர்ந்துள்ளன. இது பொய்யோ ? அதுவேயுமன்றி தோன்றியின் புதுமலர் களும் மெய்யாகத் தோன்றியுள்ளன. இதுவும் பொய்யோ ஆதலால்; இது பருவமே என்று தோழி யுடன் தலைவி மறுத்துக் கூறினன். 11. தேர்வரவு கூறல் (326. திருமால்) அங்ங்னம் மறுத்துக் கூறிய தலைவிக்கு மேகங்கள் எட்டுத் திசைக் கண்ணும் வாரா நின்றன. இது பருவமே. இனி உடன்ற மன்னர் தம்முள் பொருந்து தலால் நம் தலைவருடைய தேர் நமது பொன்னகரிடத்தே வந்து தோன்றும் என்று தலைவியின் கலக்கம் தீரத் தோழி தலைவனுடைய தேர் வரவு கூறினள். 12. வினைமுற்றி நினைதல் (327. புயலோங்கு) வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வினை முற்றிய பின்னர் (மதிலை எரியாக்கிய பின்) (உயர்ந்த பெரிய யானையை உடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த) கயல் போன்ற கண்ணையும், பெரிய வில்போலும் புருவத் தையும், உடையதாய் இந்திர கோபம் போலும் வாயையும் காட்டி ஒரு திருமுகம் வாரா நின்றது. இனிக் கடிது போதும் என்று தேர்ப்பாகன் கேட்பத் தலைவியின் முகத்தை நினைத்துக் கூறினன். (இன்று ஓர் ஆனை ஓலை அரசன் பொறி ஆகிய கயலையும் வில்லையும் உடைத்தாய் அவனது முனிவையும் காட்டி வாரா நின்றது என்று சிலேடை வகையான் பிறிதொரு பொருளும் தோன்றும்.)