பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து 2- அ திருக்கோவையார் உரைகடை 22. நகைத்து உரைத்தல் (373. இறுமாப்பு) o - இவ்வாறு பரத்தையர் தலைவி தன்னை வியந்து கூறி ள்ை என்று கேட்ட தலைவி, தலைவருடைய திண்ணிய தோள்களைப் பெறுதலால் உண்டாகிய பெருமையோடும் அவளுேடு உண்டாகிய பெரிய அணுக்கைப் பெற்ற (நெருங்கிய உறவைப் பெற்ற) தன்மையோடும் நான் செம்மாத்தலை ஒழிய இணைமுலைகள் ஏந்துதலை ஒழியப் புகா நின்றன. இனித் தனக்கொரு தங்கை தோன்றின் என்னுடைய எங்கையும் செம்மாத்தலை ஒழியும் அன்ருே? அதனுல் வருவதை அறியாது தன்னைப் புகழ்கின் ருள் என்று பரத்தையை நோக்கி நகைத்துக் கூறினள். 23. நாணுதல் கண்டு மிகுத்து உரைத்தல் (374. வேயாது) தலைவனைப் பரத்தையர் வசம் புனலாட விட்டுச் சூடு வாரின்றிச் செப்பின்கண் இட்டடைத்துத் தமியே வைகும் பூப்போல்வாள் ஆகிய தலைவி, இது தலைவர்க்குத் தகாத பழியாம் எனக் கருதி நாணி அதனை மறைத் திருந்தமையைக் கண்ட தோழி, இவளது கற்பு நமக்கு நல்ல தாயாம் இயல்பை உடைத்து. (நல்ல பகுதியை உடைய) இவளது நாணம் முதலாகிய இயல்புகள் நல்ல தன்மையன என்று சிறப்பித்துக் கூறினள். 24. பாணன் வரவு உரைத்தல் (375. விறலியும்) நாளுேடு தனியிருந்து வருந்தா நின்ற தலைவியை நோக்கி 'நல்லாய்! நம்முடைய வேந்தர்க்கு (தலைவற்கு) துயில் எழும் மங்கலம் பாட விறலியும் பாணனும் யாழைக் கொண்டு வந்து நின் ருர்கள். வருவல் (வெளவால்) இரை தேடுங் காலம் அன்மையால் பகற் பொழுதின் கண் உறையும் பெரிய மரம் போலும் இராப் பொழுதில் துணையில்லாதேமை அவர்கள் (விற லியும், பாணனும்) அறிந்திலர் போலும் என்று தோழி, பாணன் வரவைத் தலைவிக்கு உர்ைத்தனள். தலைவன் f