பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஇ. பரத்தையிற் பிரிவு அங்ங். க. வந்து என்னை அணைகின்ருன் இல்லை, யான் எவ்வாறு தலைவியை நண்ணுவிது! என்று தலைவன் வாடி மொழிந் தான். (சந்தன குங்குமத்தாலும் மாலைகளாலும் வண்டு உறையும் கொங்கை உடையாளை நான் எத்தன்மை யாலே சேர்வேன் என்றபடி), இது தோழிக்கு முன்னிலைப் புறமொழியாகத் தோழியைக் கொடுமை கூறியது.) 30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல் (381. கயல்வந்த) வாயில் பெருது மகன் திறத்தை நினைத்து நின்ற தலைவன் தில்லையைச் சூழ்ந்த நல்லநாட்டில் பொலியும் மகளிர் தம் கண் இணையால் ஒரு காலைக் கொருகால் மிகுகின்ற அச்சத்தால் வந்த மயக்கத்தால் உண்டாகிய வாட்டத்தை நீக்காத இவ் விரதம் யாதாம் என்று வாயில் வேண்டித் தோழிக்குக் கூறினன். (தோழியை வாயில் கோடற்கு இவ்வகை சொன்னன்) 31. வாயில் வேண்டத் தோழிகூறல் (382. கூற்ருயின) வாயில் வேண்டிய தலைவனுக்குப் பண்டு நீர் வரும் வழியில் இருக்கும் கொடிய சினத்தையுடைய ஆளிக்கு அஞ்சாமலும்,செறிந்த இருளையும் பொருட்படுத்தாமலும் அவைதமை இடையூருக நினையாமலும்,கன்றை அகன்ற ஈன்ற அணிமையை உடைய பசுவைப்போல் எம்மாட்டு வந்திர் ? இப்போது எம்மோடு பொருந்தாதார் இருக்கும் தெருவிலே தேர்மேல் ஏறிப் போகின்றிர் 1 இதுவன்ருே எம்மாட்டு நுமது அருள் ' எனத்தோழி தலைவனைப் பார்த்து அவன் செய்தியைக் (கொடுமை யைக்) கூறினள். o 32. தோழி வாயில் வேண்டல் (383. வியந்தலை) தலைவனுடைய செய்தியைத் தலைவிக்குக் கூறிச் சென்ற தோழி, ஒரு குடைக் கீழ் உலகெல்லாம் வியந்து போற்ற இருந்தவரும், அன்று நம் புனத்தின்