பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. பரத்தையிற் பிரிவு காட்டு அதல்ை என் காலைத் தொடாது ஒழி; என்னைத் தொடர வேண்டாம். என் கையை விடுவாயாக' என்று தலைவன் தன்னை அணைந்த வழி ஊடி நின்ருள். குறிப்பு : இளையார் வெகுள்வர் என்றது, என் வெகுளிக்கு நீ பயப்படுமாறு கண்டால் இளையவர் வெகுளிக்கும் அஞ்ச வேண்டும் என்றது. 40. புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல் (391. செந்தார் அணைந்த வழி ஊடாநின்ற தலைவி, 'இவர் செய்த பிழையெல்லாம் பொறுக்கலாம்; பலரும் அறிய ஒருத்தியைப் புனல் ஆட்டுவித்து அது செய்யாதார் போல என் மனையின்கண் இவர் வந்து நிற்கின்ற இது எனக்குப் பொறுத்தல் அரிது எனத் தணிக்கத் தணியாது பரத்தையைப் புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலந்து நின்ருள். I 41. கலவி கருதிப் புலத்தல் (392. மின்துன்னிய) புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலவா நின்ற தலைவி, ஊடல் தீர்க்க நுதலும் தோளும் முதலாயினவற்றைத் தைவந்து வருடித் தலையளி செய்த தலைவைேடு தெற்கே உள்ள பொதியிலிடத்து எமது குடி சிறியவரது குடி அதல்ை எம்முடைய சிறிய இல்லின்கண் வந்து அன்று நீர் செய்த தலையளி எங்களுக்கு அன்று வேண்டு மாயினும் இன்று உமது திருவருள் எங்களுக்கு நீர் வந்த இத்துணையே போதுமானது. வேறு நீர் தலையளி செய்ய வேண்டுவதில்லை. என்று கலவி கருதிப் புலந் தனள். 42. மிகுத்துரைத்து ஊடல் (393. செழுமிய) கலவி கருதிப் புலந்த தலைவி, புணர்தலுற்ற தலைவ னுடன், 'உலகம் ஏழினுள்ளும் சிறந்த நாட்டின்கண் சிறந்த நல்ல ஊரில் சிறந்த குடியிலுள்ளிர் எம்போல்வா