பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற பகுதி 37 40. சிவனும் திருமாலும் (40) "திருமாலும் சிவனும்' என்னும் தலைப்புப் பார்க்க) ஆட் செய்தல் திருமாலுக்கும் (அல்லது நரசிங்கமாகிய திருமாலுக்கும்) அரிதாய், அவ்வாட் செய்தல் தில்லேயில் எல்லார்க்கும் எளிதான திருவடியை உடையவர் சின் பிரான். அவர் திருமாலுக்கு அரியர்; திருமாலால் அறியப் 1. திருமாலுக்கு அரியர் சிவபிரான் படாத மறையோன் அவர். அவருடைய திருவடியைத் திருமால் கண்டிலர். ஆலிலையில் பள்ளி கொள்ளும் திருமால் பூமியைப் பிளந்து சென்றும் காணமுடியாமை யால், பின்னர், தொண்டு செய்த திருவடியையுடையவர் சிவபெருமான். திருவடியைக்காணமுடியாமையால் எந்தாய்! என்மீது இரக்கங் கொள்' என்று இரந்தனர் திருமால். பனித் துண்டத்தை (சந்திரனே)த் தமது படர் சடையில் குடியுள்ள அம்பலவர் உலகத்தைத் தனித்து உண்டவ ராகிய திருமாலால் தொழப் படுவர். அழகிய (நப்) பின்னைப் பிராட்டியின் தோளே மணந்த திருமால் ஏத்து கின்ற திருவடியை யுடையவர் சிவபெருமான். திருமா லுக்கும் பிரமனுக்கும் மூல காரணர் அ. வர். 2. திருமால் சிவனைத் தமது கண் மலரிட்டுப் பூசித்துச் சக்கரம் பெற்றது திருமால் தமது ஆயிரங் கரத்தால் மலர் ஆயிரங் கொண்டு சிவபிரானே வழிபட்டு அவரிடம் ஒளி விசுகின்ற படையைப் பெற்றனர். அங்ங்னம் ஆயிரம் மலர் கொண்டு பூசித்த போது (ஒரு பூ குறைந்த காரணத்தால்) தமது அழகிய கண்மலரையே பறித்துச் சிவபிரான் திருவடியில் இட்டுப் பூசித்தார் திருமால். கந்தி! எனக்கு வரம் தா என்று காரணர் தமது மலர்க் கண்ணே இட்டுப் பூசித்ததற் குப் பெருமான் அவருக்கு எஃகம் (சக்கரம்) தந்து உதவினர். திருமால், நறுமணத்தை உடைய மலரை இட்டுப் பரவக் கூ க்தை விரும்பினர் சிவபெருமான். i.