பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறிதி உ. அகப்பொருட் பகுதி 121 இன்று நாம் உடம்படாது நிற்கும் இந்நிலைமை என்னும் என்று ஊடல் ஒழிந்து தலைவனுடன் புணர்ச்சிக்குத் தலைவி உடம்பட்டாள். இது தலைவி துனியொழிந் துரைத்தது.) கதிர்த்த நகை மன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண் பிழைப் பித்து, எதிர்த்து எங்கு நின்று எப்பரி சளித்தான்...தில்லை நல்லார் பொதுத் தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மைப் பூசிப்பதே 3 9 si (புதல்வனே எடுத்து அணைத்து அது வாயிலாகக் கொண்டு தலைவன் உள்ளே வர, அப் புதல்வனை வாங்கி வாரி அணைத் து அவன் வாயில் தம்பலம் தம் மெய்யிற் படுத லால் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டு வந்தோ நீ எம்மைக் கொண்டாடுவது இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாக எனப் புதல்வன் மேல் வைத்துத் தலைவி புலவி தீர்ந்தனள்.) சிலை மலிவாணுதல் எங்கையது ஆகம் எனச்செழும் பூண், மலைமலி மார்பில் உதைப்பத் தந்தான் தலை; வேற்படை யூரனிற் கள்வரில் என்ன உன்னிக் கலைமலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே 397 (புலவி தீர்த்தபின் புணர்ந்த தலைவனைத் தலைவி தங்கையின் (பரத்தையரின்) மார்பு என்று கருதி உதைக்கத் தலைவன் அவ் உதையைத் தன் நெஞ்சில் உள்ளவர்க்கு நோகும் என்று கருதித்தன் தலையால் ஏற்ருன். அது கண்டு தலைவி புலந்து அழுதாள். இது கலவி யிடத் துாடல்.) ஊர் மழவிடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு, நீறுார் கொடு நெறி சென்றிச்செறி மென்முலை நெருங்கச் சீறுார் மரை அதளின் தங்கு கங்குற் சிறு துயிலே * 9 o' (யாங்கொடிய வழியில் சென்று ஒரு சிறிய ஊரில் மான் தோல் பள்ளியில் துரங்கிய துயிலுக்கு மாறு கண்டிலம் என்று முன் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தலைவன் தலைவி யின் ஊடலைத் தீர்த்தான்.) ஐயுறவாய் நம் அகன் கடைக்கண்டு வண்தேர் உருட்டும்... மழவைத் தழுவ மற்று உன் மகனே. மெய்யுறவாம் இது உன் னில்லே, வருகென வெள்கிச் சென்ருள் காரிகையே 399 'நம் புதல்வன் விளையாடக் கண்ட அவள் (பரத்தை) அவனை நின் மகன் என்று ஐயுற்றுத் தழுவக்கண்டு நீ ஐயுற வேண்டாம். அவன் உன் மகனே உறவு மெய் உறவே இவ் - o --- இல்லA உன் இல்லமே நீ உள்ளே வருவாயாக என்று நான் கூற, அவள் (பரத்தை) நாணிச்சென்ருள்' என்று தலைவி தலைவனிடம் கூறிப் பின்னும் புலந்தனள்.