பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) உ. அகப்பொருட் பகுதி 169 (11) செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல் கயிலைச் சினக்களி யானை கடிந்தார் ஒருவர்... புனங்கிளி யாங் கடியும் வரைச் சாரற் பொருப்பிடத்தே 2.93 ("நாங்கள் புனங்காத்த போது ஒரு யானை வந்து உன் மகளை ஏதம் செய்யப் புக்கது. அது கண்டு அருளுடையான் ஒருவன் ஓடிவந்து யானையைக் கடிந்து அவள் உயிரைப் பாதுகாத்துப் போயினன்' என்று தோழி செவிலியிடம் கூறி இனி அடுப்பது செய்வாயக என்றனஸ்.) (12) நற்ருய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல் இளையாள் இவளை என் சொல்லிப் பரவுதும் ஈரெயிறு முளையா அளவின் முதுக்குறைந்தாள்...... கயிலைப் பயில் செல்வியையே 2.94 ('இளையவளாகிய இவளை என் சொல்லிப் புகழுவோம்! இளமைப் பருவத்தே அறிவு முதிர்ந்தாள்' என்று தலைவியின் கற்புத் தோன்ற நற்ருயிடம் செவிலி அறத் தொடு நின்ருள் ) (13 தேர்வரவு கூறல் வலம் புரியின், வெள்ளின. மார்ப்ப வரும் பெருந்தேர் இன்று மெல்லியலே 2 9 5 (நற்ருய்க்குச் செவிலி அறத்தொடு நின்றபொழுது தலைவ னுடைய தேர் ஒலி கேட்ட தோழி உவகீையோடு சென்று தலைவியிடம் தேர்வரவு கூறினள்.) (14) வெறியாட்டின்போது வாத்தியம் முருகியம் 2.99 3. குறிஇடம் கூறல் தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கால் மதியோன் கான் உழை வாழ்வு பெற்ருங்கு எழில் காட்டும் ஒர் கார்ப் பொழிலே I 16 (இது தோழி தலைவனுக்குப். (பகற்)குறி இடம் கூறினது.) பொதியின் மலைப்பொலி சந்தணிந்து சுனைவளர் காவிகள் சூடிப் பைந்தோகை துயில்பயிலும் சினவளர் வேங்கைகள் யாங்கனின் ருடும் செழும் பொழிலே I 54