பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பிறபொருட் பகுதி (திரு iாவையார் 4. உவகைச் சுவை (சிருங்கார ரசம்) திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டு ஒங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து) உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே. 1 காரணி கற்பகம் கற்றவர் நற்றுணே பாணர்ஒக்கல் சீரணி சிந்தா மணி, அணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன், தக்கோர் தம்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே. 400 குறிப்பு: முதல் பாட்டு திருவளர் தாமரை......' என்பது உவகை மிகுதியால் தலைவன் சொன்னன் ஆகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு உவகை. உவகையாவது சிருங்காரம். 400 எண்ணுள்ள இறுதிப்பாட்டு ஊரன் (தலைவன்) யாவர்க்கும் ஊதியம் ஆகலின் அன்பால் அன்றி அருளால் பரத்தையர்க்கும் தலையளி செய்யுமன்றே : அதனுல் நீ புலக்கற் பாலையல்ல என்று குறிப்பினல் தோழி சிவப்பாற்றுவித்தது. இதல்ை இவ்விறுதிப் பாட்டின் மெய்ப் பாடும் உவகையாம் பயன் மெய்ம் மகிழ்தல். தெய்வு நூலாகிய இத்திருக் கோவையாரின் முதற்பாட்டும் இறுதிப் பாட்டும் இங்ஙனம் உவகை மெய்ப்பாட்டுடன் அமைந்துள்ளது ஒர் அற்புத அமைப்பாகும். (சிற்றின்பம், பேரின்பம்) ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈருருக் கொண் (டு) ஆனந்த வெள்ளத் திடைத்திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத் (து) அறை கழலோன் அருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம் வற்ருது முற்ருது இவ்வணி நலமே. 3 07 5. கருணை தில்லைத் தொல்லோன் கயிலேக், கிளைவயின் நீக்கி, இக் கெண்டையங் கண்ணியைக கொண்டுதந்த விளைவை அல் லால்விய வேன்நய வேன் தெய்வம் மிக்கனவே. 6