பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 111. பழக்க வழக்கம் 247 4. தில்லைக் கடையில் சங்குவளை விற்றல், ஐயன்மார்க்கு (அண்ண்ன்மார்க்கு) குற்றேவல் செய்தல். தேன் உள்ள மலர்களைக் கொண்டு கூந்தலுக்குத் தொடுத்தல்.) (68) (1) குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்ருள். (ஆற்றில் ஆடுதல்) (69) மைந்நிற வார்குழல் மாலையுந் தாதும் வளாய் (கூந்தலில் பூ முடித்தல்) (74) மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசினபோது உள்ள மீன் இழந்தார். ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஒர் கிழி பிடித்துப் பாய்சின மாவென ஏறுவர் சீறுார்ப் பனைமடலே (மாதர் கண்வலையிற் பட்டவர் பனைமடல் ஏறுவர்.) (107) சந்தனச் சோலைப் பந்தாடுகின்ருர் எண் இறந்தார். (சந்தனச் சோலையிற் பல மகளிர் பந்தாடுதல்.) (117) (1) புயல் வளரூசல், முன் ஆடி. (விளையாடும் பொழிலில் சுரபுன்னை மரத்தில் கட்டியுள்ள ஊசலில் ஆடுதல்.) (118) 11) திளை வளங் காத்து (2) சிலம்பு எதிர் கூஉய் (3) சிற்றில் முற்றிழைத்து (4) கனை வளம் பாய்ந்து (5) துணை மலர் கொய்து (1) தினைகாத்தல் (2) மலையின் எதிரில் கூவுதல். (3) சிற்றில் இழைத்தல் (4) சுனையில் பாய்ந்தாடுதல் (5) மலர் கொய்தல்.) ( 19) வார் குழற்கு...... கொங்கார் தடமலர் கொண்டு வந்து வேய். தருவன். (கூந்தலுக்கு அணிய மலர் கொண்டு வந்து தகுதல்) (127) ೯67ಹ೨ குன்றர் முழங்குங் குரவை (குன்றர் குரவை இரவில் விளையாடுதல்.)