பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையா (127) குரவை இரவிற் கண்டு (இரவில் குரவை விளையாட்டைப் பார்த்தல் ) (127) மதுவும் கிழங்கும் அருந்தி (மது, கிழங்கு உண்ணுதல்.) (1.33) ஈ விளையாட நற விளை வோர்ந்து எமர் மால்பு இயற்றும் வேய் விளையாடும் வெற்பா. (ஈ மொய்ப்பது கண்டு மூங்கில் உச்சியில் உள்ள தேனை ஏணி வைத்து ஏறி எடுத்தல்.) (1.36) அண்டர்கள் ஈர் முல்லைவேலி யெம்மூர் விடையார் மருப்புத் திருத்தி விட்டார், வியன் தென் புலியூர் உடையார் கடவி வருவது போலும் உருவினதே. Lஏறு தழுவுதல்.) (152) நின் விரை என்ன மென் நிழல் என்ன. (பூசும் வாசனைப் பொருள் எது? நீங்கள் விளையாடும் மெல்லிய நிழல் எத்தன்மையது ?) (153) தென் மலயத்து எம் மலர் சூடி நின்று, எச்சாந்து அணிந்து என்ன நன்நிழல் வாய்...எல்லி வாய் துமர் ஆடுவதே. இஎம்மலரை சூடிநின்று. எச்சாந்து அணிந்து எந்த நல்ல நிழ லிடத்தே இரவில் துமர் விளையாடுவது ?) (154) பொதியின் மலைப்பொலி சந்து அணிந்து, சுனை வளர் காவிகள் சூடிப் பைத்தோகை துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள் .யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே. (பொதிய மலை சந்தனத்தை அணிந்து, நீலப்பூவைச் சூடி, வேங்கை மர நிழலிலே மயில்கள் துங்கும் பொழிலில் விளை யாடுதல்.) (154) பைந்தோகை துயில் பயிலும் சினேவளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே. (பொழிலில் விளையாடுதல்.) (151) சுனை வளர் காவிகள் சூடி. (நீல மலர் சூடி.) (154) பொதியின் மலைப் பொலி சந்து அணிந்து (சந்தனம் அணிதல்.) (159) ஏனற் பசுங்கதிர் என்றுாழ்க்கு அழிய எழிலி உன்னிக் கானக் குறவர்கள் கம்பலை செய்யும் வம்பார் சிலம்பா.