பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையார் (அந்திக் காலத்துக் கற்புடைய மகளிராற் தொழப்படுதலின் அருந்ததி அந்திவாய் வடமீன் எனப்பட்டது.) (306) மன்னவன் தெம்முனை மேற் செல்லும் (பகை முனைக்கு (மன்னவளுல் ஏவப்பட்டு செல்லுதல்.) (330) நம் மன்னர் முன்னப் பணிவார் திறையும் பகைத்தவர் சின்ன மும் கொண்டு...அணுகினரே. (போரில் வெற்றி அடைந்தவர் பகைவர் தந்த விருதுகளைக் கொண்டு வருதல்.) (332) துணி வரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்து அளிப்பர். (மயக்கம் அடைந்தவர் மேல் தண்ணிர் தெளித்து தெளிவுபெறச் செய்தல்.) (334) எழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழிகுவது அஞ்சனம். (345) சென்ற நாள் எண் நீர்மையின் நிலனும் குழியும் விரலிட்டு அறவே. (சென்றநாளை நிலத்தில் விரலால் குழியிட்டு நாள் எண்ணுதல்). (346) திண்கோட்டின்...பொன்னர் மணிபுலம்ப நல்நா கொடும். கொல்லேறு செல்லா நின்ற கூர்ஞ் செக்கர். (மாலைப் பொழுதில் மணி ஒலிக்க ஏறு கன்றினுடன் ஊர் இடத்தைச் சேர்தல்.) (348) முதுவோர் குழுமி வில் படுவாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான விரைமலர் தூய் நெல் படுவான் பலிசெய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே. (முதுபெண்டிர் கூடித் தலைவியின் வருத்தத்தைத் தீர்க்க, மலர் தூவி, நெல்பலி கொடுத்து, வீட்டுத் தெயவத்தைப் பூசித்தல்.) (361) ஊரற்கு உலகியல் ஆறு உரைப்பான் சிவந்த பைம் போதும் அம்செம் மலர்ப்பட்டும் கட்டார் முலைமேல் சிவந்த அம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே. (r oகியல் முறையாலே நாயகனுக்குப் பூப்பறிவு உரைக்கச் சிறந்த பூவும் சிவந்த பட்டும் செஞ்சந்தனமும் அணிந்து போவது வழக்கம்.) H (3 85) உடைமணி கட்டி, (குழந்தைகளுக்கு அரையில் உடைமணி கட்டுதல்). (385) சிறுதேர் உருட்டி யுலாத் தரும் இந்நடை மணி (குழந்தைகள் சிறுதேர் உருட்டுதல்.)