பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. திருக்கோவையார் உரைநடைப் பகுதிச் சுருக்கம் தலைவனும் தலைவியும் பொழிலிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடைநிற்பத் தம்முள் ஒத்த அன்பினராகக் கூடுகின்றனர். அங்ங்ணம் கூடின தலைவன் கலவி இன்பத்திற் களித்து, இவள் அமுது நான் அமுதின் கலை எனக் கூறி மகிழ்கின்ருன் தலைவன் பிரிவான் எனக் கருதித் தலைவி வருத்துத் தலை வன், திருவே தெய்வத்தின் அருள் தானே நம்மைக் கூட்டி வுைத் தது, இனி வாடுதல் வேண்டாம். யான் இருக்கும் இடம் உன் ஊருக்கு அருகில் உள்ளது என்று கூறித் தலைவியை விட்டு அகன் முன். அகன்ற தலைவன் தலைவியை இனி எப்படிச் சந்திப்பது? எனக் கவற்சி கொண்டு மறு முறை தான் முன்பு தலைவியைச் சந்தித்த இடத்திற்குச் செல்லத் தலைவி அங்கு நிற்கக் கண்டு தந்து தெய்வம் மறுபடியும் உதவு கின்றது எனத் தெய்வத்தைப் போற்றித் தலைவன் தலைவியின் மருங்கு அணேந்தான். தலைவி ஆயத்துடன் இருப்பதால் தலைவியின் தோழியைக் கெர்ண்டு தான் தலைவியை அடிக்கடி சந்திக்க முடியும் என அறிந்து அவர்கள் இருவரும் (தலைவியும் தோழியும்) உள்வழிச் சென்று கரந்த மொழியால் தன் கருத்தை அறிவிக்கத் தோழி அறிந்து இவனிடத்து இவள் நினைவே அன்றி இவளிடத்து இவன் நினைவும் உண்டு என அறிந்து இவர்கள் இருவரும் கூடியாயிற்று எனக் கண்டு கொண்டாள். தலைவியிடம் தலைவன் பகலில் வந்து கூடுதற்கும் இரவில் வந்து கூடுதற்கும் தோழி உதவியாய் நின்றவள் தலைவனிடம் நீ இவ்வாறு பகலில் வந்தால் ஊரில் பழிச் சொல்லுக்கு இடமாகும். இரவில் வந்தால் யானே சிங்கம் முதலிய விலங்குகளால் ஏதம் உண்டாகும். ஆதலின் களவு ஒழுக்கம் உதவாது, நீ அவளே மணந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினள். தலைவன் அதற்கு உடன்படாதது கண்டு, நி அவளே உடன் அழைத்துச் செல்வாயாக’ எனச் சொல்லி அவளைத்'

  • உரைநடை கட்டுரையிற் காணலாம்.