பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 சு. திருக்கோவையார்....கருக்கம் (தலைவியை) தலைவனிடம் ஒப்புவித்தாள். தலைவியை விட்டில் கானது செவிலித்தாய் 'தலைவி எங்கே ? என்று தோழியை விவைத் தோழி 'தலைவியின் அறியாப் பருவத்தில் தானும் தலைவியும் விளையாடும் போது மதாபா வந்த எதிர்த்து வர, அந்த யாைையத் த ைவேல் கொண்டு கொன்று தலைவியைக் காத்து அருளினன் ஒருவன். பின்னும் ஒரு முறை அவனே அத்தலேவனே தலைவி கடல் அலையில் அகப்பட்டுத் திகைக்க அவளே அந்த இடரினின்றும் காத்து அருளினன். அக் காரணத்தால் தலைவி அறத்தொடு நிற்க வேண்டித் தலைவனுடன் புறப்பட்டுப் போய் விட்டாள் என்ற விவரங்களைச் சேவிலிக்குக் கூறினள். அது கேட்ட செவிலி தலைவியின் கற்பு நலத்தை வியந்தன ள். i இந்நிகழ்ச்சிகளைச் செவிலி நற்ருயிடம் சொல்ல நற்றுய் வாடி வருந்தினள். அது கண்டு செவிலி தலைவியைத் தேடப் புறப்பட்டாள். தலைவியை அங்ாவனம் தேடிச் சென்றவள் தலைவியும் தலைவனும் தலைவனது ஊரில் போயச் சேர்ந்திருப்பார்கள் என வழியில் வந்தவ ர்களால் அறிந்து திரும்பி வீடு வந்து சேர்ந்தாள். பின்னர், கில்ேவன் திரும்பி வந்து தோழியிடம் தான் கள்ள ஒழுக்கத்தையே விரும்புவதாக் கூறத் தோழி மறுத்துப் பல நீதிமொழிகளைக் கூறி மணத்திற்குத் தலைவன் உடம்படும்படி செய்வித்தாள். திருமணம் நிறைவேறிற்று. திருமணம் ஆனவுடன் தலைவன் ஒதுதற் பொருட்டும், காவற். பொருட்டும் பொருள் தேடும்பொருட்டும், இரு வேந்தற்கு உற்ற பகை தணிவித்தற் பொருட்டும், வேந்தற்கு உதவும் பொருட்டும் பிரிந்து செல்கின்ருன். அவ்வமயங்களில் தலைவி பிரிவு ஆற்ருது வருந்தினள். பிரிந்த தலைவன் வேலைகளை முடித்துக் கொண்டு தலைவியிடம் வந்து சேர்ந்தான். சேர்ந்த தலைவன் பின்னர் ப் பரத்தை மாட்டுப் பிரிகின்ருன். அதுகண்டு தலைவி வருந்துகின்ருள் தலைவன் வீடு திரும்பத் தலைவி அவன் வரவை மறுக்கின்ருள். அவர்கட்குப் பிறந்த மகனைத் தலைவன் அணேத்து எடுக்க அம்மகன் மூலமாய்த் தலைவியின் சினம் ஆறுகின்றது. அத்தகைய தலைவன் மேகத்திற்கும் கற்பகத்திற்கும் ஒப்பாவான். அவன் கற்றவர்க்கு நற்றுனே. பாணர்க்கு (இசை உணர்வாருக்கு சுற்றம் ஆவான். சிந்தாமன் போல்வான். சிவன் திருவடிக்குக் கொன்றைப் பூ ஆவான். தக்கோர்க்குச் சங்க நிதி, நட்டார்க்கும் தப்பாது பயன் கொடுத்தலின் விதி ஆவான். உற்றவர்க்கு ஊருணி போல்வான்; யாவர்க்கும் ஊதியம் ஆவான். (வரைவின்றி எல்லார்க்கு இவன் பெறும் பயன் ஆவான்.) ஊதியம் ஆகலின் அன்பால் அன்றி அருளால் பரத்தையர்க்கும் தலையளி செய்தான் என்பது. I