பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. பேரின்பப் பகுதி தில்லைப் பெருமானப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது திருக்கோவையாராதலின், பேரின்பப் பொருள் இந்நூலிற் புதைத் துள்ளது. தலைவி சிவமாகவும் (பரமாத்மா ஆகவும்) தலைவன் உயிராகவும் (ஜீவாத்மா ஆகவும்) தோழி திரு அருளாகவும் கொள்ளப் பெறும். இவ்வுண்மை அறிந்த பெரியோர்கள் இந்நூலை ஒரு ஞான நூல் என்பர். இதஞல் அன்ருே பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன் ஐந்தினே உறுப்பில் நாற்ப்ொருள் பயக்கும் காமஞ் சான்ற ஞானப் பனுவல்' எனக் குமர குருபர சுவாமிகள் சிதம்பர மும்மணிக் கோவையில் இந் நூலைப் புகழ்ந்துள்ளார். இந்நூலில் உள்ள 400 பாடல்களிற் பல இடங் களில் தெளிவாகவும். சில இடங்களில் மறை பொருளாகவும்: பேரின் பப் பொருளைக் க்ாணலாம். உதாரணமாகச் சில பாடல்களை இங்கு எடுத்துக் காட்டுவாம். பாட்டு g &M பேரின் பம் சிற்றின்பம் 1. தலைவியைத் தலைவன் கண்ணுற் மது 5. தலைவியின் உள்ளக் கருத்தைத் தலைவன் அறிந்தது. 8. தலைவன் புணர்ச்சி இன்பத்தின் இயல்பு கூறியது. 10. தலைவியின் மென்மொழி கேட்கத் தலைவன் விருப்புற்றது. 18. காதல் தோழியை மடவரல் (தலைவி) காட்ட மன்னன் (தலைவன்) அறிந்தது. o 41. (தலைவியின்) மொழி பெருமல் தலைவன் வாடி உரைத்தது. குருவின் திருமேனி காண்டல். தன்னிடத்தில் சிவத்திற்குக் கருணை யுண்டென்று உயிர் (ஜீவாத்மா) அறிந்தது. பெற்ற இன்பத்தை வியந்தது. குருமொழி வேண்டிக் குறை பிரந்துரைத்தது. வேம் அறிவிக்கத் திருவருளைக் கண்டது. திருவாய் மலராவிடின் (உயிர் உய்யேன் என்றது.