பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) திருக்கோவையார் பாடிய வரலாறு 353 பிரமோத்தர காண்டம் சித வார் பொழில் தில்லைப் பரமனுக்(கு) ஒது நற்றமிழ்க் கோவை உரை செய்த நாதன் மாணிக்க வாசகன் நாண்மலர்ப் பாத பங்கயம் ஏத்திப் பரவுவாம். குமரகுருபா சுவாமிகள் சிதம்பர மும்மணிக்கோவை - 23 ஒருவன் காணு தொளித்திருந் தோயை வனசப் புத்தேள் மணிநாப் பந்திக் கவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப் பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன் ஐந்திணை யுறுப்பில் நாற்பொருள் பயக்கும் காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப் பொருளெனச் சுட்டிய ஒரு பெருஞ் செல்வ. 2 : திருவெங்கை உலா பூவை விளையாடும் போதில் ஒரு மூவர் பாவை விழையும் பழமலையான்-கோவை யெழுதும் திருக்கரத்தான், எய்யாமல் வேத முழுதும் புகழு முதல்வன். 28 1, 28.4 திருவெங்கைக் கோவை (பாங்கி தலைவியின் அவயவத்து அருமை சாற்றல்) மந்தா கினி அணி வேனிப்பிரான் வெங்கை மன்னவ நீ H கொந்தார் குழல்மணி மேகலை நூல்நுட்பம் கொள்வதெங்கன் சிந்தா மணியும் திருக்கோ வையும் எழு திக்கொளினும் நந்தா உரையை எழுதல் எவ்வாறு நவின்றருளே. 107 சிவஞான பாலைய தேசிகர் பிள்ளைத்தமிழ் அருந்தமிழ்நா டொருகோடி தவஞ்செயலுந்து அதிர்வெள் அருவி துாங்(கு) உயர்மயிலை வரையின்மர் விளக்கைப் பரந்துபடு மிகுபாச ஞானமொடு மற்றைப் பசுஞானங் கடந்த சிவ ஞானியைக்காத் தளிக்க விரிந்தமறை யொருநான்கு மெழுதுகில மென வோர் வீறுடைப்பொற் கொன்றைபுனே விரிசடையோன் எழுதத் திருந்துதமிழ்க் கோவையொரு நானுாறும் உரைத்த திருவாத ஆரனெனுஞ் செழுமலர்க்கற் பகமே. தி. கோ. ஒ.-23