பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) திருக்கோவையார் பாடிய வரலாறு 355 திருக்கரத்தினல் எழுதி, ஆண்ட அடிமை கொண்டருளிய, செல்வா - ரிேயரே கூதிருக்கோ - குளிர் காற்றுக்கா (அன்றி) வை ஆர் படை - கூர்மை பொருந்திய பானங்களை உடைய வேட்கோ - மன்மதனுக்கா, இன்று . இப்பொழுது, எனது சேல்விழி - மீன் போலும் நோக்கினை உடைய தலைமகள். ஆற்றும் சகிப்பள். அருள் கருணை செய்து அருளுக. தாண்டவராய சுவாமிகள் இயற்றிய சிறப்புப் பாயிரம் மாறனும் புலவரு மயங்குறு காலை இறையனர் அகப்பொருள் எனப்படும் பனுவலே முறைமையின் மொழிந்த முதிர்திரு வாக்கால் ஐந்திணைக் கோவை அலங்கரித்(து) உரையெனச் சுந்தரத் தாண்டவத் தோன்றலார் பணிப்பக் கருணையை உன்னிக் கணக்கில்பே ரின் பப் பொருள்நயம் தழுவிப் புனிதநல் வாக்கால் திருக்கோவை யுள்ளிடுந் தேவரும் பரவத் திருக்கோவை யாரினைச் செப்பினர் அஃதை இருக்கினுஞ் சிறந்ததா ஏற்றெம் பெருமான் திருக்கரங் கொண்டு திட்டிய தன்றியும் அழகிய திருச்சிற் றம்பலம் உடையான் எழுதியதே என நெட் டெழுத்துமிட் டருளினன் ஆதலால் இந்நூல் அரும்பொருட் பயனே ஒதவுங் கேட்கவும் ஒருவரால் முடியுமோ காமச் சுவையினைக் கட்டுரைத் திடுதலாற் காமுகர் காமநூல் எனக்களித் துரைப்பம் இலக்கியக் கடல் நின்றேறுதற் கீதோர் இலக்கிய நூல் எனக் கவிஞர்கள் இசைப்பவும் இலக்கண விதியெலாம் எளிதினிற் பயில இலக்கண நூல் என இயல்வலோர் இயம்பவும் அன்பினைப் பெருக்கி அரனடி அளித்தலால் அன்பு நூல் என மெய் அன்பினர் அறையவும் வேதமெய்ப் பொருளினை விளங்கஓ துதலால் வேதமே எனவே தியர்வியந் துரைப்பவுஞ் சைவ சித் தாந்தத் தனிப்பொருள் தருதலின் சைவா கமமெனச் சைவர்கள் சாற்றவும், பலபட இங்பூவனம் பாருளோர் புனைந்து சொல்நளிை விளங்கித் தோன்றும் இந்நூல்.