பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 ஒளிநெறி பிற்சேர்க்கை (திருக்காவையார் திருக்கோவையார் பெருமை (1) எத்திக்கும் போற்றும் திருவாசகத் தேனை ஈந்தபிரான் தித்திக்கும் இன்பத் திருக்கோவை தந்த திறம்புகலின் பத்திக்கும் ஆண்பெண் சிவசக்தி யென்று பழகிவளர் முத்திக்கும் வித்தாக மும்மலம் போக மொழிந்ததுவே. (2) இன்பச் சிவனே யியல்பாகச் சீவன் இணைந்துவளர் அன்புப் பொருளைத் திருவாச கஞ்செய் யருட்புலவர் பண்புற்ற காதற் பழந்தேன் குழைத்துப் பருகிடநாம் நண்புற்ற சிற்றம் பலக்கோவை தன்னை நவின்றனரே ! யாதிலும் தானும் இறைவனே யான்மா இணைந்துவக்கும் காதலை யின்பக் கலைச்சிற்ப மாக்கிக் கவியளித்த வாதவூர் வந்து மதிமத் திரியான வள்ளல் சிவ போதவூர் போகப் போக வழியொன்று புகன்றனனே. (சுத்தானந்த பாரதி (3) பட்டினத்துப் பிள்ளையார் புராண்ம் நானுாற்று மணிக்கோவை நடம்பயிலெம் பெருமாற்குத் தேனுற்றும் பொன்னிதழித் தெரியலுமேம் படச்சாத்தி வானுற்ற முதவுதிரு வாச(க)ம் பேசினர் பாத, மாநூற்று விலையாது வணங்குதும்.யாம் வணங்குதுமே. சிவராத்திரிப் புராணம் பெருவாத பித்தகலப் பிணிக்குடையும் உடற்சுமக்கும் பிறந்தை நீக்கி ஒருவாத சிவகதியின் உரிமைபெற நறவமலர் உமிழும் சோலை மருவாத மளைந்துலவு மன்றுடையாற் குக்கோவை மாலை சாத்து ந் திருவாத வூரடிகள் அடிகள்படி யுறவணங்கிச் சென்னி சேர்ப்பாம். மச்ச புராணம் கறைமிடற்றெம் பரற்போற்றித் கரிபரியா வரவழைத்துக் கயற்கண் மூங்கை .." இறைவளையைப் பேசுவித்துப் புத்தரை வென்(று) அம்பலத்தின் இனிதின் ஆடும் I