பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 1. ஒளிநெறி பிற்சேர்க்கை (திருக்கோவையாார் மருதூர்ப் புராணம் பொருந்துறை பிலிற்றுங் கொண்டல் பொலிதடஞ் சோலை மன்னும் பெருந்துறை நகரிற் பெம்மான் பெருகுதண் கருணை வைத்துக் குருந்துறை தரமுன் தன்னைக் கொடுத்தருட் டேறன் மாந்தி அருந்துறை(ப்) பதிகம் பாடும் ஐயர்தாள் வணக்கஞ் செய்வாம். திருவாஞ்சாத்தல புராணம் தற்பர மாகிஎங்கும் தாணுவாய் நிறைந்தா னந்த பொற்பொது அதனில் ஆடும் புனிதனுக் கிசைந்த தாக அற்புதத் தமிழாற் கோவை அறைந்திடும் வாத ஆரன் நற்பதம் தலைமேற் கொண்டு நாவினில் வழுத்து வாமே. திருவெண்காட்டுப் புராணம் சிற்றம் பலக்கோவைத் தேன்சொரியும் செம்முகிலை மற்ருெப் பிலாததிரு வாசகத்தின் வாரிதியைக் கற்றைச் சடையான் கருத்துருக்குங் காதலனைக் கொற்றத் திருவாத ஆரனைக்கை கூப்புதுமே. வேதாரணிய புராணம் எந்தை யருளாற் கூடற்பதி வந்தேறி யெண்ணரிதாம் பரியரசுக் கேற வேற்றி முந்துதிரு வாசகமா மணிக் குலத்தை மூதுலகோ ரின் புறமா முகத்தாற் று.ாவி அந்தமிலேந் திணைதழுவு கோவை நின்றும் அகமகிழ வரும்பொருளு மவனுக் கீந்து வந்துபெருந் துறைபுகுந்து மலைபு காத வாதவூர்த் தமிழ்க்கடலை வணங்கல் செய்வாம். (பரஞ்சோதி முனிவா, வேதாரணிய புராணம் w இருள்சார்ந்த வுயிர் தனதன் பிழைத்தனைய தமிழ்ப்பாவா வின்ப மாரு மருள்சாரு மெனவுணர்த்த நரியனைத்தும் பரியாக்கி யமல மாய