பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசக அடிகளைப் போற்றி வடலூர் வள்ளலார் இாாமலிங்க அடிகள் அருளிய ஆ ளு டை ய வ டி கள் அருள் மாலை (தரவு கொச்சகக் கலிப்பா) கே. சி. தில் இவனிக்கின்ற தெள்ளமுதே ! மாணிக்க வாசகனே ! ஆனந்த வடிவான மாதவனே ! மாசகன்ற நீதிருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின் ஆசகன்ற அநுபவ நான் அதுபவிக்க அருளுதியே. சேமமிகுந் திருவாத ஆர்த்தே வென் றுலகுபுகழ் மாமணியே நீயுரைத்த வாசகத்தை எண்ணு தொறுங் காமமிகு காதலன் தன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன் பெய்துவதே. வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் வான் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. பெண் சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் வண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி மண் சுமந்து நின்றதுமோர் மாறன் பிரம்Eடியாற் புண் சுமந்து கொண்டதுநின் பொருட்டன் ருே புண்ணியனே. வாட்டிமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என் னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.