பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


திருச்சியிலும் வசித்தான். மதுரையில் பெரிய மால் ஒன்றைக்கட்டினான். இப்பொழுதும் 'திருமலை நாயக்கன் மால்' என்ற பிறஸித்தியுண்டு.

முத்து அளகாத்திரி (1582-1584) :— மஹமதியருடன் முரண் செய்ததில் முத்து அளகாத்திரி காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டான். தஞ்சாவூர், வல்லம், இவைகளையும் மஹமதியர் கைப்பற்றினர். முத்து அளகாத்திரி பயந்து, திரவியத்தைக்கொடுத்து, அவர் தயவை மறுபடியும் அடைந்தான்.

சொக்கனாதன் (1585-1604) :— தஞ்சாவூர் நாயக்கன் தூண்டுதலின் பேரில் திருச்சினாப்பள்ளிக்கு மஹமதியர் இரண்டு தடவை வந்தனர். முதல் தடவை தோற்கடிக்கப் பட்டபோதிலும் இரண்டாந்தடவையில் அவர் சொக்கனாதனிடம் கப்பம் பெற்றுச் சென்றார். தஞ்சாவூர் நாயக்கனின் குமாரியைக் கலியாணம் செய்ய நினைத்த சொக்கனாதன் தன் எண்ணம் நிறைவேறாமல் தஞ்சைக் கோட்டையைத் தாக்கினான். தன் குமாரியையும் அரண்மனையிலுள்ள மற்ற ஸ்திரீகளையும் ஓர் அறையிலிருக்கச்செய்து, வெடி மருந்தால் அதைத் தகர்த்திவிட்டு, யுத்தத்திற்குச் சென்ற தஞ்சை நாயக்கன் தோற்கடிக்கப்பட்டு தலையையிழந்தான். சொக்கனாதன் சகோதரன் அளகிரி தஞ்சாவூரில் ஸ்தாபிக்கப்பட்டான். ஆனால் அவன் கொஞ்ச காலத்தில் ஸ்வதந்திரனானான்.

இறந்து போன தஞ்சாயூர் நாயக்கனின் சந்ததியாருள் ஒருவன் பீஜப்பூர் ஸுல்டானிடம் உதவிகேட்க 1596-ல் மஹாராஷ்ட்ர வெங்காஜி (சீவாஜி சத்ரபதியின் சகோதான்) ஒரு பெரும் சேனையுடன் அனுப்பப்பட்டான். அளகிரியைத் தோற்கடித்து விட்டு வெங்காஜி தானே ராஜ்யத்தை வைத்துக்கொண்டான்.