பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


படுத்தி மானபங்கமும் செய்தார்கள். ஹிந்துக்களின் கோவில்களில் பலவற்றைத் தம் வசமாக்கி அவைகளைப் பள்ளிவாசல்களாக மாற்றினார்கள். ஓர் உதாரணமாய் நத்தர்ஷா பள்ளிவாசலைச் சொல்லலாம். அது பூர்வகாலத்தில் மாத்ருபூதர் கோவில். திரிசிரஸ்ஸினால் மலைமேல் ஆலயம் கட்டப்படுமுன் ஸ்வாமி கீழே இருந்தார். அவருக்கு மலைமேல் அவனால் இரண்டாவது ஆலயம் ஏற்படுத்தப்பட்து. மஹமதியர் அக்கோவிலைப் பள்ளிவாசலாக்கி ஸ்வாமியின் மேல் விளக்கை இப்போதும் ஏற்றி வருகிறார்கள். சிலவருஷங்களுக்குமுன் இடிந்து போன காம்பவுண்ட் சுவற்றைக்கட்ட அஸ்திவாரம் பரித்ததில் மண்வெட்டியினாலடிபட்டுத் தலையுடைந்த நந்தியொன்று அகப்பட்டது. ஒரு தூணில் நண்டு ஒன்று ஸ்வாமிக்குப் பூஜைசெய்யும் ஐதீகம் காணப்படுகிறது. கோவிலின் கோபுரம் ஸஹஸ்ரபணா பணியினால் தாங்கப்படும் போல் கட்டப்பட்டிருக்கிறது.


12-ம் அதிகாரம்.
ஆங்கிலோ பிரஞ்சு கர்னாடக முதல் யுத்தம்.

கொஞ்சகாலமாய் ஒருவருக்கொருவர் சண்டைசெய்து கொண்டிருந்து தற்சமயம் சமாதானமாயிருந்த ஆங்கிவரிடமும் பிரஞ்சாரிடமும் அவரவருக்கு வேண்டிய அளவுக்கு மேற்பட்ட போர்வீரர்கள் இருந்தனர். ஆகையால் கர்னாடகச் சண்டையில் அவர்கள் தலையிட்டுக்கொண்டார்கள். ஆங்கிலர் மஹமடாலி பக்கமும் பிரஞ்சார் சண்டாசாஹிப் பக்கமும் சேர்ந்தனர். பின் நடந்த சண்டை . கர்னாடக நவாப் ஸ்தானத்திற்காக மஹமதியருள் சண்டையாயிராமல் தென்னிந்தியாவின் ஆதிபத்யத்திற்காக ஆங்கிலோ பிரஞ்சு சண்டையாகவேயிருந்தது.