பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


பேரில் சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். ஆங்கிலரும் சுட்டுக்கொண்டேயிருந்தார், இரு கக்ஷியாரும் சூரியோதயத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர். பொழுதும் விடிந்தது. பிரஞ்சாரும் சரணமடைந்தார். தெய்வாதீனமாய் குழியில்லாமலிருந்தாலும் இருப்புலக்கைக்காரர் கொல்லப்படாமலிருந்தாலும் வழிகாட்டி இறக்காமலிருந்தாலும் பிரஞ்சார் ஜயமடைந்திருப்பர்.

1676-ல் தை மாசத்தில் தஞ்சாவூரிலிருந்து சாமான் கொண்டுவந்த ஆங்கில சைன்யம் அனுபோகமில்லாத சேனாபதியின் முட்டாள் தனத்தால் தோற்கடிக்கப்பட்டது. கூத்தப்பாரில் ஆங்கிலரை மஹாராஷ்ட்ரரும் மைசூராரும் பிரஞ்சு உதவியைக்கொண்டு எதிர்த்தனர். ஆங்கிவருள் அனேகர் கொல்லப்பட்டு 150 பேர் வரையில் கைதிசெய்யப்பட்டனர். திருவெறும்பூரிலிருந்து உதவிக்கு வந்தவராவது ஏக காலத்தில் ஒரே கூட்டமாய் வந்திருக்கலாம். அப்படியுமில்லை.

அதே வருஷம் சித்திரை மாசம் 31-ம் தேதி பொன் மலைக்கருகில் நடந்த மற்றொரு சண்டையில் பிரஞ்சார் துரத்தியடிக்கப்பட்டனர்.

பிறகு பிரஞ்சார் புதுக்கோட்டைக்குள் சென்று சில கிராமங்களைக் கொளுத்தினர். ஆங்கிலருக்கு உதவி செய்த தப்பிதத்திற்காக தொண்டமானை தண்டிக்க முடியாமல் போனதால் கிளியூரையும் கோவிலடியையும் பிடித்துக்கொண்டு காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவேயுள்ள கரையை இடித்தனர். எதிர்த்து வந்த தஞ்சாவூராரும் கோற்கடிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் முரஹரி ராவ் கர்னாடகத்தைவிட்டு வடக்கே சென்றான்.

லாரென்ஸ் மறுபடியும் தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில் பொன்மலைக்குச் சமீபத்தில் எதிர்க்கப்பட்டான். பிர-