பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்கால அரசாக்ஷி

43


(A.D.1873) இப்பொழுது கவர்ன்மெண்டு ஹெட்குவார்ட்டர் ஹாஸ்பிட்டல் என்று சொல்லப்படும் வைத்தியசாலையும் அதற்கு கிழக்கில் ஒரு மணிக்கூண்டும் திருச்சினாப்பள்ளி முனிசிபாலிட்டியாரால் கட்டப்பட்டது. 1797-ம் (December A. D. 1875) வருஷத்தில் இங்கிலாண்டு யுவராஜன் (பிறகு எட்வர்ட் VII மன்னன்) திருச்சிக்கு வந்ததின் அடையாளமாக ஒரு வளைவு சுவர் (arch) கட்டப்பட்டது.[1]


17-ம் அதிகாரம். தற்கால அரசாக்ஷி.

இங்கிலாண்டாசன் கிரீடத்தில் விளங்கும் விலையுயர்ந்த ரத்நம் நம் பாரததேசம். அம்மன்னனுக்கு இந்தியா சக்ரவர்த்தியெனப் பெயருமுண்டு. தலைநகரமாகிய லண்டனிலிருந்து பார்லிமெண்டு சபைகளின் உதவியைக் கொண்டு எல்லாக்கண்டங்களிலுமுள்ள தன் நாடுகளில் ஆக்ஷி செலுத்துகின்றானக் கோமான். இந்தியாவை ராஜப் பிரதிநிதியாயிருந்து ஆளுவதற்கு 5 வருஷத்திற்கொரு முறை ஒரு ஆங்கில சீமான் அனுப்பப்படுவது வழக்கம். அவனுக்கு உதவி புரிய ஒரு சபை உண்டு (Executive Council). அச்சபையின் அங்கத்தினருள் ஒருவன் இந்தியன்.


  1. * 1784-ல் (11th March A.D. 1862) தஞ்சாவூரிலிருந்து திருச்சினாப்பள்ளி ஜங்ஷன் மார்க்கமாய் திருச்சினாப்பள்ளி கோட்டைவரையிலும் 1788-ல் (3rd December A. D. 1866) திருச்சினாப்பள்ளி கோட்டையிலிருந்து கரூர் வரையிலும் 1/97-ல் (1st September A.D. 1875) திருச்சினாப்பள்ளி ஜங்ஷனிலிருந்து மதுரை வரையிலும் இருப்புப்பாதைகள் போடப்பட்டன.