பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


கட்டுப்பட்டிருக்கிறான். கிராம அதிகாரிகளுக்கு பென்ஷன் கிடையாது.

Judicial Department :—ஸிவில் நியாய விசாரணை செய்ய திருச்சினாப்பள்ளியில் ஒரு ஜில்லா ஜட்ஜியும் ஒரு ஸப்ஜட்ஜியும் 6 டிஸ்ட்ரிக்ட் முன்சீப்புகளும் இருக்கிறார்கள். இவர்களுள் ஜில்லா ஜட்ஜபக்கு பெருங் குற்றங்களை விசாரிக்கவும் கொலை முதலிய தண்டளைகள் செய்யவும் அதிகாரமுண்டு. இந்த டிபார்ட்மெண்டுக்கு மாகாண அதிகாரி சென்னை ஹைகோர்ட்டு.

Public works Department :— ரோட்டுகள் போடுதல், பாலங்கள் கட்டுதல், ஆறுகளிலிருந்து வாய்க்கால்களில் கிராமபாசனத்துக்கு வேண்டிய ஜலம் விடுதல், முதலிய வேலையைச் செய்பவர் P. W. Department-ஐச் சேர்ந்தவர். ஜில்லா அதிகாரி Executive Engineer. இவருக்குக் கீழ் Sub-Engineer, Supervisor, Overseer', SubOverseer, மேஸ்திரி, முதலியவர்கள் உண்டு. நாலைந்து ஜில்லாக்களிலுள்ள Executive Engineer-களுக்கு மேலதிகாரி Superintending Engineer.

Department of Public Instruction:— படிப்பிலாக்காவைக் கவனிக்க ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒரு District Educational Officer-ம் அவனுக்குக் கீழ் பல Deputy Inspector-களும் உண்டு. இவர்களுக்கு மேல்பட்ட மாகாண அதிகாரி Director.

Posts and Telegraphs :— திருச்சி ஜில்லாவில் பல இடங்களில் தபால் ஆபீஸ்களும் தந்தி ஆபீஸ்களும் உள. சிறிய கிராமங்களிலுள்ள தபாலாபீஸ்கள் பிராஞ்சு ஆபீஸ்கள். பெரிய கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ளவை ஸப் ஆபீஸ்கள். திருச்சினாப்பள்ளி கண்டோன்மெண்டி-