பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


அதிகாரிகள் ஸப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், Deputy Commissioner, கமிஷனர், முதலியவர்கள்.

Forest Department :— ஆற்றுப்படுகைகளிலும் இன்னும் மற்றுமுள்ள ஸர்க்கார் பாரஸ்டுகளைக் கவனிப்பவர் டிஸ்டிரிக்ட் பாரஸ்டு ஆபீஸரும் ரேஞ்சர்களும்.

Registration Department :—ஜனங்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொடுக்கும் தஸ்தாவேஜுகளைப் பதிவு செய்பவர் இந்த இலாக்காக்காரர். திருச்சியில் இருப்பவர் District Registrar. அங்கங்கே கிராமங்களிலிருப்பவர்கள் Sub-Registrars. இந்த இலாக்காவின் மாகாண அதிகாரி Inspector-General.

Police Department :— இந்த ஜில்லாவில் போலீஸ் வேலை செய்பவர் District Superintendent-ம் அவருக்குக் கீழ் Deputy Superintendents, Inspectors, SubInspectors, Head Constables, Constables-ம் ஆம். இவர் வேலை குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும் ஆகும். பெருங் குற்றவாளிகளை நியாய விசாரணை தீருமட்டும் மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவின் மேல் ஜெயிலில் வைக்க (Remand செய்ய) இவர்களுக்கு அதிகாரமுண்டு. இவர்களே ஜெயில், கஜானா, முதலியவைகளைக் காக்கவேண்டும். பட்டணங்களிலும் கிராமங்களிலும் இராக்காலங்களில் திருட்டு நடக்காமல் ரோந்து சுற்றிப் பார்ப்பதும் இவர் வேலை தான். இவர்களால் முடியாவிட்டால் ராணுவ உத்தியோகஸ்தர் இவருக்கு உதவி செய்ய வேண்டும்.

Military Department :— இந்தியா கவர்னர்-ஜனாலுக்கு அடுத்தபடியாய் சம அதிகாரம் பெற்ற Commander-in-Chief- னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து