பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லோகல் போர்டுகளும் முனிஸிபாலிட்டிகளும்.

49


நடக்கவும் ஸிவில் உத்தியோகஸ்தருக்கு வேண்டும் போது உதவி செய்யவும் பெருங் கலகங்கள் முதலியவற்றை யடக்கவும் கூட்டக் கொள்ளைக்காரரைப் பிடிக்கவும் தேச விரோதிகளுடன் போர் செய்யவும் ஏற்பட்டவர் ராணுவத்தார். தென்னிந்தியாவில் சென்னை, திருச்சி, பாளையங்கோட்டை, கொச்சி, வெல்லிங்டன், திருவனந்தபுரம், பெங்களூர் முதலிய இடங்களில் ஸைன்யங்கள் இருக்கின்றன. இந்தியா கவர்ன்மெண்டு உத்தியோகஸ்தருள் மிகவும் கவுரவம் பொருந்தியவரும் நன் மதிக்கப்படுபவரும் ராணுவத்தாரே.

Local Boards and Municipalities :— திருச்சினாப்பள்ளி ஜில்லாவில் திருச்சி, ஸ்ரீரங்கம், கரூர்களில் முனிஸி பாலிட்டிகளும், ஒவ்வொரு தாலூகாவிலும் ஒரு தாலூகா போர்டும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகள் ஜனங்களிடம் வீட்டு வரி, தொழில் வரி, தண்ணீர் சாக்கடை வரி, கக்கூஸ் வரி, படிப்பு வரி, ரோட்டு வரி, முதலிய பல வரிகளை வசூல் செய்து அப்பணங்களைக்கொண்டு தாமே Government Department-களின் மேல்பார்வையின் கீழ் ரோட்டுகள் போடவும், தெருக்களை சுத்தம் செய்யவும், வீதிகளில் இராக்காலங்களில் வெளிச்சம் போடவும், தண்ணீர்க் குழாய்கள் வைக்கவும், கிணறுகள், குளங்கள் வெட்டவும், ஹாஸ்பத்திரிகள் மூலமாய் ஜனங்களுக்கு வைத்தியம் செய்யவும், குழந்தைகளுக்கு அம்மை குத்தவும், இரண்டு மூன்று கிளாஸ் வரையில் படிப்பு கற்றுக்கொடுக்கவும், இந்த மாதிரி இன்னும் பல ஜன ஊழிய வேலைகள் செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கின்றன. தாலூகா போர்டுகளுக்கெல்லாம் மேல்பட்டது டிஸ்ட்ரிக்ட் போர்டு, இந்த ஜில்லாவில் டிஸ்ட்ரிக்ட் போர்டு மூன்று ஹைஸ்கூல்களையும் நடத்துகிறது. டிஸ்ட்ரிக்ட் போர்டும், தாலூகா போர்டுகளும், முனிஸிபாவிட்டிகளும் ஜனங்களால் பொறுக்கியெடுக்கப்பட்ட சில