பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


(சம்பளமில்லாத) கௌரவ அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. தாலூகா போர்டுக்குக் கீழ் பெரிய கிராமங்களில் முனிஸிபாலிட்டிகள் மாதிரியே யூனியன் போர்டுகளுமுண்டு. இவைகளே ஜனங்களுக்கு ஆளும் திறமையை உண்டுபண்ணக்கூடியவை என்றும் பாரத தேசத்தில் ஜனஸமூக ஸ்வய ஆக்ஷியின் ஆரம்பமெனவும் கருதப்படுகின்றன. இவைகளை மேல்பார்வையிட்டு குற்றங் குறைகளில்லாமல் சீர்திருத்த ஜில்லா கலெக்டருக்கு அதிகாரமுண்டு,

வருஷத்திற் கொருமுறை இந்தியா கவர்ன்மெண்டார் சென்ற வருஷத்தில் நாடு எவ்விகம் ஆளப்பட்டது என்று ஒரு புஸ்தகம் வெளியிட்டு அப்புஸ்தகத்தை இங்கிலாண்டு ஸர்க்காருக்கு அனுப்பவேண்டியது.


Printed at the St. Joseph's Industrial School Press,
Cantonment, Trichinopoly.— 1924.