பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii மாதிரிக்காகத் தலந்தோறும் சில-பல பாடல்கள் இன்னபிற சேர்த்து. ஒரு நூல் வெளியிட்டால் பயனுள்ளதாக அமையும் என எண்ணினேன். தமிழ்க்கடல்'அருகில் இருக்கையில் அந்த எண்ணம் நிறைவேறத் தடை ஏன்? உடனேயே திருத்தலப் பயணம்' என்ற இந்நூலைக் கொணர முனைந்தார்கள். அதற்கான குறிப்புகள், பாடல்கள் தேர்வு, முதலிய பல பகுதிகளை மிக விரைவில் தொகுத்தார்கள். இரவு-பகல் என்று பாராது. தன் வயதின் தன்மையையும் ஒதுக்கித் தள்ளி உழைத்தார்கள். அவரது சிரிய முயற்சியின் விளைவே இந்நூல். நூலின் தனிச்சிறப்புப் பெரிது. அதை எடுத்துக் கூறும் ஆற்றல் எனக்கு இல்லை. இந்நூலைப்பற்றிய..தமிழ்க்கடல் அவர்களின் முன்னுரையில் இதனைக் கண்டு கொள்க. என்மேல் உள்ள அன்பு காரணமாக இந்நூலை மிக விரைவில். நன்கு ஆக்கித் தந்த தமிழ்க் கடல் அவர்களுக்கு நானும், இந்நூல் மூலம் பயன் பெறுவோரும் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அவர்கள் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து நமக்கெல் லாம் நல்வழி காட்டுவாராக! திருத்தலப் பயணத்தின்போது எனக்கு ஏற்பட்ட அநுபவத்தின் காரணமாகவும், வெற்றிகரமாக முடித்ததின் விளைவாகவும் என் மனத்தின்கண் எழுந்த எண்ணங்களை இங்குக்கூற ஆசைப் படுகிறேன். 1. தலயாத்திரை எல்லோரும் செய்தல் வேண்டும்: அதிலும் இந்துவாகப் பிறந்தவர் ஒவ்வொருவரும். தமது ஆயுட் காலத்தில், ஒரு தடவையேனும் கட்டாய மாகச் செய்தல் வேண்டும். 2. தல யாத்திரை செய்யும்போது, தலத்தைப் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொண்டோமானால் மிக்க பயன் உண்டு. தலயாத்திரை மனத்துய்மையை அளிக்கிறது. 4. தள்ளாடி நடக்கும் பருவம்வரைத்தலயாத்திரையைத் தள்ளிப்போடக்கூடாது தேக வலிவு தளருவதற்குள். அதாவது 55 ஆவது வயதிலிருந்து 60 ஆவது வயதிற் குள்ளாவது தல யாத்திரை மேற்கொள்வது நலம் அவசியமுமாகும். 5. பாடற் சிறப்புப் பெற்ற அனேகத் தலங்கள் நல்ல நிலையிலில்லை. அவற்றைச் செப்பனிட அரசாங்கமும் பொதுமக்களும் ஆவன செய்ய வேண்டும்.