பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 65 அண்மையில் இருக்கின்றது. கோயில் குன்றின் மேல் உள்ளது. சுமார் 500 படிகள் இருக்கும். செங்குத்தான ஏற்றம். சிவலிங்கம் மரகதக் கல் போல் நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கின்றது. புலவர் நக்கிரர் இம் மலை ஈசற்கு "சங்கோய் எழுபது" என்ற ஒரு நூல் இயற்றியுள்ளார். காவிரிக்கு வட கரையில் உள்ள தேவாரத் தலங்கள் 83ஈங்கோய் மலை இறுதித் தலம். இதற்கு நேரே காவிரிக்குத் தென்கரையில் முதல்தலமாகவாட்போக்கி இருக்கின்றது. அது இதை விட மிகப் பெரிய மலை, சம்பந்தர் வானத்து உயர்தண் மதிதோய் சடைமேல் மத்த மலர்சூடித் தேன்ஒத் தனமென் மொழிமான் விழியாள் தேவி பாகமாக் கானத்து இரவில் எரிகொண்டு ஆடும் கடவுள் உலகுஏத்த ஏனத் திரள்வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே. மணிவாசகர் ஈங்கோய் மலைஎம் எந்தாய்! போற்றி! நக்கிர தேவ நாயனார் தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல் ஒகை செரியாயத்து ஓடாட-நாகம் இனவளையில் புக்குஒளிக்கும் ஈங்கோயே நம்மேல் வினைவளையச் செற்றுஉகந்தான் வெற்பு. 64. திருவாட்போக்கி (ரத்நகிரி, மாணிக்கமலை, சிவாயமலை) ரத்தினகிரீசர், முடித்தழும்பர்-சுரும்பார்குழலி அப்பர் 1 வழிபட்ட நாள் : 13-11-56, 7-1-66. மிக உயரமான மலை, மலையின் உயரம் 1178 அடி என்று