பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருத்தலப்பயணம் சொல்லப் பெறுகிறது. 952 படிகள். மலையின் உச்சியில் சுவாமி கோயில் இருக்கின்றது. அம்மன் கோயில் மலையின் நடுவில் இருக்கின்றது. இம்மலை இப்போது "ஐயர் மலை" என்று வழங்கப் பெறுகின்றது. குழித்தலையிலிருந்து மனப்பாறை செல்லும் சாலையில் இத்தலம் ஐந்துகல் தொலைவில் இருக்கின்றது. காவிரியின் தென்கரைத் தலங்கள் 128ல் இதுவே முதல் தலம். இதற்கு நேராகக் காவிரியின் வடகரையில் ஈங்கோய்மலை இருக்கின்றது. வடகரைத்தலங்களுள் இறுதியில் வைத்து எண்ணப் பெறும் தலம் ஈங்கோய்மலை, வாட்போக்கி மலையில் சுவாமி மேற்கு முகமாக எழுந்தருளியிருக்கின்றார். அப்பர் நாடிவந்து நமன்தமர் நல்இருள் கூடி வந்து குமைப்பதன் முன்னமே ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை வாடி ஏத்தநம் வாட்டம் தவிருமே. 65. கடம்பந்துறை (கடம்பர்கோயில், குழித்தலை) கடம்பவனநாதர்-முற்றிலாமுலையாள் அப்பர் : 1. வழிபட்டநாள் : 13-11-56, 7-1-66. இரயில் நிலையம், திருச்சிராப்பள்ளி ஈரோடு வழியிலுள்ள குழித்தலைதான் கடம்பந்துறை. திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் அண்மையில் கோயில் இருக்கின்றது. சுவாமி சந்நிதி வடக்கு நோக்கியது. வடக்குப் பார்த்த சந்நிதி மிக அருமையாகவே இருக்கும்.