பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 67 அப்பர் பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை. வண்ண நன்மல ரான்,பல தேவரும் கண்ண னும்அறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை ஆயின நாசமே. ஐயடிகள் காடவர் கோன் தாயனார் அழகு திரிகுரம்பை ஆங்குஅதுவிட்டு ஆவி ஒழுகும் பொழுதுஅறிய ஒண்ணா-கழுகு கழித்துஉண்டு அலையாமுன், காவிரியின் தென்பால் குழித்தண் டலையானைக் கூறு. 66. திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர்-பொன்மயிலாம்பிகை சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநான் : 29-9-57, 17-10-65. இரயில் நிலையம்: திருச்சி-ஈரோடு வழியிலிருக்கிறது. திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் பத்துமைல் தொலைவில் கோயில் இருக்கிறது. திருப்பராய்த்துறையைத் திருவாசகம் இரண்டு இடங்களில் பாராட்டுகின்றது. சம்பந்தர் நீறு சேர்வதுஓர் மேனியர் நேர்இழை கூறு சேர்வதுஓர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே.