பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 திருத்தலப்பயணம் அப்பர் கரப்பர் காலம் அடைந்தவர் தம்வினை சுருக்கம் ஆறுவல் லார்.கங்கை செஞ்டைப் பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. தைைளிவாசகர் அன்பர் ஆகிமற்று அருந்தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல்உறு மெழுகாம் என்பர் ஆய்நினை வார்ன் னைப்பலர் நிற்க இங்குஎனை ஏற்றினுக்கு ஆண்டாய்? வன்ப ராய்முருடு ஒக்கும்என் சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்.சிவ லோகா திருப்பெ ருந்துறை மேவிய சிவனே! 67. கற்குடி (உய்யக்கொண்டான்) உய்யக்கொண்டநாதர்-மைவிழியம்மை சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 15-3-56, 12-1-66 திருச்சிராப் பள்ளிக்குத் தென்மேற்கு இரண்டரைக் கல் தொலைவிலுள்ளது. கோயில் மலையின் மீது இருக்கிறது. மேற்குப் பார்த்த சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டு. இங்கிருந்து. மூன்றரைக் கல் தொலைவில் வயலூர் என்ற சிறந்த முருகன் தலம் உள்ளது. சம்பந்தர் மானிடம் ஆர்தரு கையர் மாமழு ஆரும் வலத்தார்: ஊன் இடை ஆர்தலை ஒட்டில் உண்கலன் ஆக உகந்தார்; தேன்.இடை ஆர்தரு சந்தின் திண்சிறை யால்.தினை வித்திக் கான்இடை வேடர் விளைக்கும் கற்குடி மாமலை யாரே.