பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 69 அப்பர் சங்கைதனைத் தவிர்த்துஆண்ட தலைவன் தன்னை, சங்கரனை தழல்உறுதாள் மழுவாள் தாங்கும். அங்கையனை. அங்கமணி ஆகத் தானை. ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த மங்கையனை. மதியொடுமா சுணமும் தம்மின் மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க் கங்கையனை. கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. சுந்தரர் சந்தார் வெண்குழை யாய்!சரி கோவண ஆடை யானே! பந்தா ரும்விர லாள்.ஒரு பாகம் அமர்ந்த வன்னே! கந்தார் சோலைகள் சூழ்திருக் கற்குடி மன்னி நின்ற எந்தாய்! எம்பெரு மான்அடி யேனையும் ஏன்று கொண்ளே. 68. மூக்கிச்சுரம் (உறையூர்) பஞ்சவர்ணேசுரர்-காந்திமதி சம்பந்தர் : 1. வழிபட்டதான் :15-3-56, 12-1-66. திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் ஒருகல் தொலைவில் உள்ளது. உறையூர் ஒரு காலத்தில் சோழ மன்னரின் தலை நகராக இருந்தது. புகழ்ச் சோழ நாயனார் அரசாண்ட பதி இது. இத் தலத்துக்கு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் புராணம் பாடியுள்ளார். சம்பந்தர் நீர்உளா ரும்மலர் மேல்உறை வான்நெடு மாலும்ஆய்ச் சிர்உளா ரும்கழல் தேடமெய்த் தித்திரள் ஆயினான். சிரினால் அங்குஒளிர் தென்னவன். செம்பியன், வில்லவன் சேரும்மூக் கிச்சரத்து அடிகள்செய் கின்றது.ஓர் செம்மையே.