பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருத்தலப்பயணம் சேக்கிழார் குலகிரியின் கொடுமுடிமேல் கொடிவேங்கைக் குறிஎழுதி நிலவுதரு மதிக்குடைக்கிழ் நெடுநிலம்காத்து இனிதுஅளிக்கும் மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர் வளநாட்டு மாமூதூர் உலகில்வளர் அணிக்குஎல்லாம் உள்ளுறைஊ ராம்உறையூர். 69. திருச்சிராப்பள்ளி தாயுமானவர்-மட்டுவார்குழலி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டதான் : 1-9-57, 11-1-66 இரயில் நிலையம். கோயில் இருக்கும் இடத்திற்கு மலைக்கோட்டை என்று பெயர். நடு ஊருக்குள் ஒர் குன்றின் மீது கோயில் இருக்கிறது. இறைவன் எழுத்தருளியிருக்கிற இடம் தரையிலிருந்து சுமார் 500 அடி உயரத்திலிருக்கின்றது. அதற்கும் மேல் 200 அடி உயரத்தில் உச்சிப் பிள்ளையார் கோயில் இருக்கின்றது. இறைவன் ஓர் பெண்ணின் மகப் பேறு காரணமாகத் தாயாக வந்தமையால் "தாயும் ஆனவர்" என்து பெயர் பெற்றார் என்பர். பின்னாளில் சைவம் தழைக்கப் பல அரிய பாடல்கள் பாடிய, திருமறைக் காட்டில் பிறந்து அருளிய தாயுமான சுவாமிகள் இக்கடவுள் பெயரையே தாங்கி இருந்தார். இத்தலத்துக்குச் சைவ எல்லப்ப நாவலர் புராணம் பாடியுள்ளார். சம்பந்தர் கைம்மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழைபாய்வான் செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி வெம்முக வேழத்து ஈருரி போர்த்த விகிர்தா! நீ பைம்முக நாகம் மதிஉடன் வைத்தல் பழி அன்றே.