பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருத்தலப்பயணம் 71. நெடுங்களம் (திருநட்டான்குளம்) நித்தியசுந்தரர்-ஒப்பிலாநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநான் : 17-3-56, 12-1-66. இத் தலம் எறும்பியூருக்கு வடகிழக்கே ஏழுகல் தொலைவில் உள்ளது. சோழகம்பட்டி இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கல் அளவு. சம்பந்தர் நின்அடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத என்அடியான் உயிரைவவ்வேல் என்று.அடல்கூற்று உதைத்த பொன்அடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்அடியார் இடர்களையாய்! நெடுங்களம் மேயவனே! ஐயடிகள் காடவர் கோன் நாயனார் தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாது பெட்டப் பினம்என்று பேர்இட்டுக்-கட்டி எடுங்கள் அத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே! நெடுங்களத்தான் பாதம் நினை. 72. மேலைத்திருக்காட்டுப்பள்ளி தியாடியப்பர்-வார்கொண்டமுலையாள் சம்பந்தர் : 1 அப்பர் : 1. வழிபட்டநாள் : 24-3-57 2-1-66. திருச்சி-தஞ்சை இருப்புப் பாதையில் பூதலூர் இரயில் நிலையத்திலிருந்துவடக்கே5 கல்தொலைவு. திருவையாற்றிற்கு மேற்கில் 11 மைல். திருவையாற்றிலிருந்து இத்தலத்திற்குச்