பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருத்தலப்பயணம் 74. திருப்பூந்துருத்தி புட்பவனநாதர்-அழகார்ந்தநாயகி. அப்பர் .ே வழிபட்டநாள் : 18-12-56, 2-4-86. திருக்கண்டியூருக்கு மேற்கே இரண்டு கல். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் இணைந்து அளவளாவிய பதிகளில் திருப்பூந்துருத்தி ஒன்று. இத் தலத்தில்தான் திருஞானசம்பந்தர் அறியா வண்ணம் அவர் இவர்ந்து வந்த சிவிகையைத் திருநாவுக்கரசர் தாங்கினார் என்று சேக்கிழார் கூறுவார். திருநாவுக்கரசு சுவாமிகள் திருமடம் ஒன்று அமைத்துக் கொண்டு நெடுங்காலம் பணி செய்தார் என்பர். இரண்டு ஆறுகட்கு இடையிலுள்ள தலம் "துருத்தி" என்று கூறப் பெறும் திருத்துருத்தி வேறு: திருப்பூந்துருத்தி வேறு. திருத்துருத்தியும் தேவாரத்தலமே. திருத்துருத்தி, திருவாசகத்திலும் கூறப்பெறுகின்றது. அப்பர் எனக்குஎன்றும் இனியானை, எம்மான் தன்னை, எழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை, மனக்குஎன்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை. நின்றியூர் மேயான் தன்னைத் தனக்குஎன்றும் அடியேனை ஆளாக் கொண்ட சங்கரனை. சங்கவார் குழையான் தன்னை. புனக்கொன்றை தார்அணிந்த புனிதன் தன்னை, பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே. சேக்கிழார் நீடிய அப்பதி நின்று நெய்த்தான மேமுத லாக மாடுயர் தானம் பணிந்து, மழபாடி யாரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித் தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.